இலங்கை அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியை பெற்று ஒயிட் வாஸ் செய்து அசத்தியிருக்கிறது.
தற்போது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று இருந்தது.
சிறப்பு சதங்கள் அடித்த ஆஸ்திரேலியர்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. குசால் மெண்டிஸ் 85, தினேஷ் சண்டிமல் 74 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் நாதன் லயன், மிட்சல் ஸ்டார்க், குஹ்னேமன் என மூவரும் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
இது தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் ஸ்மித் சதம் அடித்து 131 ரன் எடுத்தார். ஆசியாவில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆஸ்திரேலியர் என சாதனை படைத்தார். இதற்கு அடுத்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதம் அடித்து 156 ரன்கள் எடுத்தார். இலங்கை மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 414 ரன்கள் குவித்தது. பிரபா ஜெயசூர்யா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
சுலபமான இலக்கில் சிக்கிய இலங்கை
இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி மீண்டும் 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு என் அஞ்சலும் மேத்யூஸ் 74 மற்றும் குசால் மெண்டிஸ் 50 ரன்கள் எடுத்தார்கள். பந்துவீச்சில் நாதன் லயன் மற்றும் குஹ்னேமன் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலியா அணிக்கு 75 ரன்கள் என்ற எளிய இலக்கு கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க : ரோகித் சர்மாவுக்காக.. நான் இந்த 2 விஷயத்தை செய்ய மாட்டேன் – இந்திய பேட்டிங் கோச் பேட்டி
இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேற்கொண்டு உஸ்மான் கவஜா 27, லபுசேன் 26 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் மெகா வெற்றிகள் பெற்று இலங்கை அணியை அவர்களது சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்திருக்கிறது.






