இந்திய கிரிக்கெட்

WTC-ல் அஸ்வின் படைத்த மெகா சாதனை.. ஆஸியின் நாதன் லயன் ரெக்கார்டை உடைத்தார்.. புனே 2வது டெஸ்ட்

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய உலக சாதனையை படித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

நியூசிலாந்து அணிக்கு கிடைத்த சாதகம்

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் புனே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு மிகவும் பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்த நிலையில் இந்திய அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் டாசை தோற்று இருக்கிறது. அதே சமயத்தில் தொடரை வெல்வதற்கு நியூசிலாந்து அணி நல்ல வாய்ப்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி ஒரே நல்ல முடிவாக பேட்டிங் மற்றும் ஆப் ஸ்பின் வீசக்கூடிய வாஷிங்டன் சுந்தரை உள்ளே கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக பேட்டிங் யூனிட்டுக்கு வலிமை கிடைக்கும். அதே சமயத்தில் நியூசிலாந்து நட்சத்திர இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வெளியே பந்தை எடுக்க ஒரு பவுலரும் கூடுதலாக கிடைத்திருக்கிறார்.

- Advertisement -

இறுதியாக சாதித்த அஸ்வின்

இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே பந்துவீச்சுக்கு வந்துவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விக்கெட்டை 15 ரன்னில் எல்பிடபிள்யு மூலமாக கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து வில் யங் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அவருடைய விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒட்டுமொத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள்களில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு அந்த இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சாதனையை முறியடித்தார்.

இதையும் படிங்க : ரோகித் கம்பீர் பயந்துட்டாங்க.. வாஷிங்டன் சுந்தர் வந்த காரணமே வேற – கவாஸ்கர் விமர்சனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள்களில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் :

ரவிச்சந்திரன் அஸ்வின் 39 டெஸ்ட் 74 இன்னிங்ஸ் 188 விக்கெட்.
நாதன் லயன் 43 டெஸ்ட் 78 இன்னிங்ஸ் 187 விக்கெட்.
கம்மின்ஸ் 42 டெஸ்ட் 78 இன்னிங்ஸ் 175 இன்னிங்ஸ்.
மிட்சல் ஸ்டார்க் 38 டெஸ்ட் 73 இன்னிங்ஸ் 147 விக்கெட்

- Advertisement -
Published by

Recent Posts