இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 27ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனம் எதிர்கால திட்டம் குறித்து சில முக்கிய யோசனைகளை கூறி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் ஐபிஎல் தொடரில் மிக முக்கிய பங்குவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அஸ்வின் சென்னை அணிக்கப் போதிய பங்களிப்பை வழங்க முடியவில்லை.
இந்த நிலையில் எப்போதுமே முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு தயங்காத அஸ்வின் இந்த முறை ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் பட்சத்தில் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் ஒரு வருடத்தில் மூன்று லீக் தொடர்களில் தன்னால் பங்கேற்க முடியும் எனவும் அதன் மூலம் நல்ல அனுபவத்தை தன்னால் பெற முடியும் எனவும் சில நல்ல யோசனைகளை வழங்கி இருக்கிறார்.
இது குறித்து அஸ்வின் கூறும் போது “ஒரு வருடத்தில் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று லீக் தொடர்களில் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். உரிமையாளர்கள் எனக்கு பயிற்சியாளர் பதவியை வழங்க தயாராக இருந்தால் அதையும் நான் ஏற்க தயாராக இருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல பணி அனுபவம் உள்ள வேலையை நான் தேடுகிறேன். அதற்கு நீங்கள் உங்கள் தகுதிகளை பெற வேண்டும். இந்தியாவில் இது போன்ற மனநிலையை பெறுவது மிகவும் கடினம்.
இதையும் படிங்க:கோலி மாதிரி ரோஹித் இதை அனுபவிக்கணும்.. கடைசியா அவருக்கு இந்த வாய்ப்பை கொடுங்க – சுரேஷ் ரெய்னா கோரிக்கை
நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது இது குறித்து ஒரு முறை பேசப்பட்டது. நான் ஒரு பயிற்சியாளராகி அந்த அணியின் வீரராக தொடர முடியுமா? என்று பேசப்பட்டது. ஆனால் அந்த யோசனை எதற்குப் பிறகு இங்கும் செல்லவில்லை இந்தியாவில் இது போன்ற நடைபெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால் வேறு ஏதாவது லீக்கில் நான் வேறு பயிற்சியாளர் இடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.






