மக்கள் முன் தவறு செய்து நீங்கள் அவமானப்பட வேண்டும் – இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் தன்னிடம் கூறியதை போட்டுடைத்து ரவிசந்திரன் அஸ்வின்

0
285

இந்திய அணிக்கு டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் மத்தியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்பொழுது ஆஸ்தான ஒரு ஸ்பின் பந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தான் இவ்வளவு தூரம் பயணித்து வர, தனக்கு முன்னால் இந்திய தலைமை பயிற்சியாளர் கூறிய அறிவுரை மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது என்று தற்போது கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் கூறிய அறிவுரை

- Advertisement -

இந்திய அணியின் பொற்காலத்தில் நான் உள்ளே நுழைந்தேன். 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர் மற்றும் 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர், இந்த இரண்டிலும் நான் பங்கு பெற்று இருந்தேன். அதேபோல 2014ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரிலும் அணியில் நான் பங்கெடுத்திருந்தேன். 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர், 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 2014ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

அதன் பின்னர் டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து வந்தது. ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய ஆட்டத்தை நான் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நிறைய வித்தியாசமான முயற்சிகளை எடுப்பேன்.

ஒரு சமயத்தில் இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் டங்கன் பிளட்சரிடம் சென்று நான் எவ்வாறு வெற்றிகரமான பந்து வீச்சாளராக வலம் வருவது என்று கேட்டேன். அதற்கு அவர் “நீங்கள் நிறைய தப்புகளை மக்கள் முன்னிலையில் செய்து, அவமானத்தை பெற வேண்டும்”, அதுவே உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறியது உண்மைதான் நான் நிறைய விஷயங்களை ஆரம்ப காலகட்டத்தில் முயற்சி செய்தபோது மக்கள் நிறைய என்னை கிண்டல் செய்தார்கள். இவர் அதிக லட்சியத்துடன் பயணிக்கிறார் அல்லது அதிக முயற்சி செய்ய வேண்டும் இன்று ஆர்வக்கோளாறில் ஏதாவது செய்கிறாரா என்று பல விமர்சனங்களை முன்வைத்தனர்.

அவை எதையும் கண்டுகொள்ளாமல் என்னுடைய முயற்சியை நான் தற்பொழுது வரை கைவிடவில்லை. அதை நான் கைவிட்டு இருந்தால் இன்று இந்த ரவிச்சந்திரன் அஸ்வினை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள். எப்பொழுதும் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கினால் நான் என்னுடைய ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.