இந்த வருடம் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்த அணியை கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இந்த அணியில் சேர்ந்து விளையாடிய தமிழக வீரர் பாபா இந்தரஜித் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் கேப்டனாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
நடந்து முடிந்த டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கொண்டு வந்த பங்களிப்பு என்பது அளவிட முடியாதது. பந்துவீச்சாளராக மட்டும் இல்லாமல், ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அவர் கடைசி மூன்று போட்டிகளிலும் அதிரடி சதம் அடித்து அணியை சாம்பியன் பட்டத்தை வெல்ல வைத்தார்.
மேலும் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியதோடு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் போல அவரே செயல்பட்டார். அந்த அணிக்கு பயிற்சியாளர் என்று யாருமே கிடையாது. இப்படி பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன், கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் என நான்கு பாத்திரங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு உழைத்து சாம்பியன் ஆக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் இணைந்து விளையாடிய தமிழக வீரர் பாபா இந்திரஜித் ரவிச்சந்திரன் அஸ்வின் அணிக்கு எப்படியான உழைப்பை கொடுத்தார்? அவருடைய உழைப்புக்கு எது தகுதியான ஒன்றாக இருக்கும்? எனக் கூறியிருக்கிறார்.
பாபா இந்திரஜித் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசும்பொழுது “நிச்சயமாக ஐபிஎல் தொடருக்கு அவரை எல்லோரும் ஒரு கேப்டனாகவே பார்ப்பார்கள். அவருக்கு மிகச் சிறந்த கிரிக்கெட் மூளை இருக்கிறது. அவர் எப்பொழுதும் ஒரு பேட்டராகவோ பந்துவீச்சாளராகவோ உயர்த்த வேண்டும் என்று நினைப்பார். அவருக்கு எல்லா தலைமை பண்புகளும் இருக்கின்றன. ஒரு கேப்டனாக ஐபிஎல் தொடரில் அவர் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அவரது ஈடுபாடு அவருடைய திறமையில் மட்டும் இருக்காது, மற்ற வீரர்களின் திறமையிலும் அவர் ஈடுபாடு காட்டினார். மேலும் களத்திற்கு உள்ளே மட்டுமில்லாமல் வெளியேயும் அவர் இப்படித்தான் நடந்து கொண்டார். மொத்தமாக பயிற்சி முகாமோட சேர்த்து 30 முதல் 35 நாட்கள் எங்களுடன் மொத்தமாக ஈடுபட்டார்.
இதையும் படிங்க : பாக் வீரரை மகன் என சொன்ன நீரஜ் சோப்ராவின் தாய்.. சோயிப் அக்தர் நெகிழ்ச்சி பதில்.. ஒலிம்பிக் 2024
மேலும் அவர் வீரர்களின் உடல் தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்தார். மேலும் அதற்காக அவர்களை தூண்டினார். அணியின் முதல் வீரரில் ஆரம்பித்து இருபதாவது வீரர் வரை எல்லோருடனும் அவர் ஈடுபட்டார். அணிக்கு ஒரு தலைமை பயிற்சியாளர் இருந்திருந்தால் கூட இதை எல்லாம் செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.