அஸ்வின் எங்கள பார்த்து எதுக்கு ஆச்சரியப்படறிங்க?.. அது தேவையில்லாதது – பாக் அகமத் சேஷாத் பேச்சு

0
33
Ashwin

பாகிஸ்தான் கிரிக்கெட் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி தனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.

தற்போது இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது சேஷாத் நகைச்சுவையான முறையில் எங்கள் நாட்டு கிரிக்கெட் மிகவும் நல்ல முறையில் இருக்கிறது, நீங்கள் இதை பார்த்து ஆச்சரியப்படத் தேவையில்லை இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கேலி செய்திருக்கிறார்.

- Advertisement -

நம்ப முடியவில்லை

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய வீழ்ச்சி பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” இதெல்லாம் ஒருபுறம் இருக்க, 10 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் எங்கு இருந்தது என்று பார்க்கும் பொழுது, மிஸ்பா உல் ஹக் யூனிஸ் கான் போன்றவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது என்பது எளிதானது கிடையாது.

அப்போது பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷா போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். மேலும் அவர்களுக்கு இரண்டு இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் வந்திருந்தார்கள். இப்படி இருந்த ஒரு அணி தற்போது இருக்கும் நிலையை என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆச்சரியப்பட வேண்டாம்

இது குறித்து அகமத் சேஷாத் கூறும் பொழுது “ஏன் அஸ்வின் ஆச்சரியப்படுகிறீர்கள்? கவலைப்படாதீர்கள் இங்கு எல்லாம் நன்றாகவே இருக்கிறது. இங்கு மைதானங்கள் கட்டப்பட்டு கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை? தொடர்ந்து அதற்காக தூண்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்.

இதையும் படிங்க : 6678 ரன்.. 366 விக்கெட்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மொயின் அலி.. ஐபிஎல் 2025-ல் ஆடுவாரா.?

பாகிஸ்தான் உள்நாட்டில் சாம்பியன் டிராபி கோப்பைக்கு தயாராவது உங்களுக்கு தெரியவில்லையா? அந்தத் தொடரில் சிறப்பாக வெளியே வர இருக்கும் பாகிஸ்தான் வீரர்களை பார்க்க காத்திருங்கள். வேகப்பந்துவீச்சாளர்களின் பேட்டரியை எப்படி பெறுகிறோம் என்று பாருங்கள். இப்படி எல்லாம் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -