இந்திய கிரிக்கெட்

அந்த 1 பந்துக்காக.. இவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுறார்.. இது ஏன்னு எனக்கு புரியல.. ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் சில தினங்களில் விளையாட உள்ளது.

- Advertisement -

அதற்கு அடுத்ததாக வருகிற 19ஆம் தேதி முதல் இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் வருகிற 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை சுப்மான் கில் தலைமையிலான அணி எதிர்கொண்டு விளையாட உள்ளது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அணியின் ஒரு அங்கமாக வகிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித்ராணா இதுவரை பெரிய பங்களிப்பு எதுவும் வழங்காத நிலையிலும் இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும்போது “ஏன் அவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள நான் தேர்வு கூடத்தில் இருக்க விரும்புகிறேன். என் தரப்பில் இருந்து நான் பார்க்கும் காரணம் என்னவென்றால், ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் பேட்டிங் செய்யக் கூடிய வேகப்பந்துவீச்சாளர் தேவை. அவர் பேட்டிங் செய்ய முடியும் என்று யாரும் நம்புகிறார்கள். அதனால் தான் எட்டாவது இடத்திற்கு அவரை தேர்வு செய்கிறார்கள். ஆனால் அவரது பேட்டிங் திறன் குறித்து எனக்கு தெரியவில்லை. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அவரது சிறப்பான பந்துவீச்சை பார்த்தேன்.

இதையும் படிங்க:ரோகித்துக்கு அகர்கர் விரித்த வலை.. ப்ளீஸ் இந்த ரூட்ல முடிவு கட்டாதீங்க – முகமது கைஃப் வேண்டுகோள்

அந்த ஒரு பந்துக்காக அவர் சிறிது காலம் இந்திய அணியில் விளையாடியிருக்கிறார். ஆனால் அவருக்கு பந்தை கையாளும் திறன் நிச்சயமாக உள்ளது. யாராவது அவருக்கு திறமை இல்லை என்றால் அதை நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். யாராவது ஒரு வீரரிடம் இருந்து நெருக்கமாக கவனித்து அவரது திறமையைப் பார்த்தால் இது போன்ற தேர்வுகள் நடைபெறலாம். இன்று எல்லாரும் ரவீந்திர ஜடேஜாவை பாராட்டுகிறார்கள் ஆனால் ஒரு காலத்தில் ஜடேஜா ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார்கள்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts