இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிலையான பேட்டிங் ஆர்டர் என்பது அதிகமாக மதிப்பிடப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது என கூறியிருக்கிறார்
கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இந்திய அணிக்கு வந்ததில் இருந்து துவக்க ஆட்டக்காரர்களை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களுக்கும் நிலையான இடம் கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக கம்பீர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்து வருகிறது. தற்போது இதற்கு கம்பீர் விளக்கம் அளித்திருக்கிறார்.
பேட்டிங் ஆர்டர் மிகைப்படுத்தப்பட்டது
இது குறித்து கம்பீர் பேசும் பொழுது “இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களை தவிர மற்றபடி பேட்டிங் ஆர்டர் என்பது மிகவும் மதிப்பு கூட்டப்பட்ட மிகைப்படுத்தப்பட்டது. நான் இப்படித்தான் நினைக்கிறேன். ஏனென்றால் டி20 கிரிக்கெட் என்பது தாக்கத்தை பற்றியது. டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் நீங்கள் எத்தனை ரன் எடுத்தீர்கள் என்பது முக்கியம் கிடையாது. நீங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை கொடுத்தீர்கள் என்பதுதான் முக்கியம்”
“இந்த விளையாட்டில் வீசப்படும் 120 பந்துகளில் ஒவ்வொரு பந்துமே ஒவ்வொரு நிகழ்வு. இதனால் நாம் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச தாக்கத்தை நிகழ்த்தி ஆக வேண்டும். எனவே தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து ஒரே மாதிரியான பேட்டிங் ஆர்டரை கொண்டிருக்கவில்லை. நாங்கள் இப்படிப்பட்ட விளையாட்டை தான் விளையாட விரும்புகிறோம்”
நான் பயிற்சியாளராக வளர வேண்டும்
“ஒரு பேட்ஸ்மேனின் ரன் ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் போன்ற எதைப் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை விரும்பவும் இல்லை. ஒரு வீரர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று மட்டும் பார்க்கிறோம். இது இந்த அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் பும்ராவை விட இவர் தான் முக்கிய பவுலர்.. நமக்கு பெரிய சொத்து – பத்ரிநாத் பேச்சு
“தற்போது டி20 கிரிக்கெட் வேகமாக மாறிக்கொண்டு வளர்ந்து கொண்டு வருகிறது. இந்த வேகத்திற்கு ஒரு பயிற்சியாளராக நானும் வளர வேண்டும். இல்லையென்றால் நாம் எப்பொழுதும் ஒரு எட்டு பந்துகளுக்கு பின்னால்தான் இருப்போம். டி20 கிரிக்கெட் பொறுத்தவரையில் தற்போதைய காலத்தை விட நாம் முன்னே இருக்க விரும்புகிறோம். இளம் வீரர்கள் இந்த யோசனைக்கு நல்ல முறையில் மாறி இருக்கிறார்கள். அவர்கள் இந்த முறைக்கு தங்களை இன்னும் நன்றாக மாற்றிக் கொண்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






