இந்திய கிரிக்கெட்

அபிஷேக் ஷர்மாவிடமுள்ள இந்த டெக்னிக் உலகில் எந்த பேட்ஸ்மேனுக்கும் கிடையாது.. ரெய்னா மாதிரி பயமுறுத்துறாரு – அஸ்வின் பேட்டி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில் அதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய இளம் பேட்டர் ஒருவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாக பாராட்டி பேசி இருக்கிறார்.

எட்டு நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது துபாயில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுக்க, அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணி தனது அதிரடி பேட்டிங்கை ஆரம்பித்தது.

அதில் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, இயல்பாகவே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான சாகின் அப்ரிடியின் பந்துவீச்சில் பௌண்டரிகளாக விளாசி 13 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த சூழ்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அபிஷேக் சர்மாவிடம் இருக்கும் பேட் ஸ்விங் மற்ற பேட்ஸ்மேன்கள் பார்த்த பொறாமை படக்கூடிய விஷயமாகும் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “இப்போது உள்ள இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பார்க்கும்போது யாருமே தங்கள் மைல் கற்களுக்காக விளையாடுவதில்லை. இவர்கள் இதைத் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறார்கள். அபிஷேக் ஷர்மா எளிதாக 50 முதல் 60 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை அபிஷேக் ஷர்மா ஏன் சிறப்பு வாய்ந்தவராக இருக்கிறார்? பெரும்பான்மையான மக்கள் அவரது பேட் ஸ்விங்கை பார்த்து பொறாமைப் படுகிறார்கள். உலகின் பல பேட்ஸ்மேன்களிடம் இந்த திறமை கிடையாது.

இதையும் படிங்க:என்னை பற்றி என்ன விமர்சனம் வந்தாலும் சரி.. இந்திய அணியில் இந்த ஒரு விஷயத்தில் உறுதியா இருப்பேன் – கோச் கம்பீர்

அவருக்கு மட்டை எளிதாக பின்னோக்கி செல்கிறது, ரெய்னா எப்படி ஆடுவாரோ அதேபோல தனது மட்டையை பின்னோக்கி நகர்த்துகிறார். ரெய்னா மிட் விக்கெட்டுக்கு மேல் அடிக்கும் போதெல்லாம் அவர் தனது முதுகை உடைத்து விடுவார் என்று நினைத்தேன். ஏனென்றால் அவரது மட்டை எப்போது பின்னோக்கி செல்கிறதோ அப்போது அந்த மாதிரியான உணர்வை கொடுக்கும். அதுபோல அபிஷேக் ஷர்மாவும் இத்தகைய வீரர்களில் ஒருவர்தான். எனவே நாம் கவனிக்கக்கூடிய வீரர்களில் இவரும் ஒருவர்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by