என்னை பற்றி என்ன விமர்சனம் வந்தாலும் சரி.. இந்திய அணியில் இந்த ஒரு விஷயத்தில் உறுதியா இருப்பேன் – கோச் கம்பீர்

0
116

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர், தனது பணி அனுபவம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.

- Advertisement -

துபாயில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் பரஹான் 40 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 15.5 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இந்த சூழ்நிலையில் போட்டிக்குப் பிறகு வர்ணையாளர் குழுவில் பேசிய கௌதம் கம்பீர், இந்தப் பணியில் தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தான் நேர்மையாக செயல்படும் விதம் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “ஒரு பயிற்சியாளராக எனக்கு நல்ல நாட்கள் மற்றும் கெட்ட நாட்கள் இருந்திருக்கின்றன. பயிற்சியாளர் பதவி என்றால் இதுதான். இத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும் என்று எனக்கு முன்பே தெரியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ட்ரெஸ்ஸிங் ரூமில் நேர்மையாக செயல்பட வேண்டும் என்பது மட்டுமே ஆகும். இந்திய கிரிக்கெட் முன்னேற வேண்டுமானால் எல்லா இடங்களிலும் நேர்மை தேவை. அது டிரெஸ்ஸிங் ரூம் மற்றும் வர்ணனை பெட்டி என்று எதுவாக இருந்தாலும் சரி.

இதையும் படிங்க:போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் செய்த மாஸ் சம்பவம்.. காணாமல் போன பாக் கேப்டன் – களத்தில் என்ன நடந்தது?

நீங்கள் ஆரஞ்சு பழங்களை ஆரஞ்சு பழங்களுடன் மட்டுமே ஒப்பிடுகிறீர்கள். ஆரஞ்சு பழங்களை ஆப்பிள் பழங்களோடு ஒப்பிட மாட்டீர்கள். எங்கள் டெஸ்ட் அணியில் பலர் மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை, நான் இறுதியில் வீரர்களை ஆதரித்துக் கொண்டே இருந்தேன். எதிர்காலத்தில் நாங்கள் நல்ல முடிவுகளை பெறுவோம் என்று நம்புகிறேன்” என்று கம்பீர் பேசியிருக்கிறார்.

- Advertisement -