தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தியை எக்ஸ்போஸ் செய்ய வேண்டாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். இதற்கு டி20 உலக கோப்பையை மனதில் வைத்து சில முக்கியமான காரணங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று கட் ஆப் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு இந்த டி20 தொடர் மிக முக்கியமானதாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் எப்படியான பிளேயிங் லெவனுடன் களம் இறங்குமோ, அதேபோல தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக களம் இறங்கி சோதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இதற்கு நேர்மாறாக எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” நாம் வருண் சக்கரவர்த்தியை அதிகம் எக்ஸ்போஸ் செய்யக்கூடாது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக நாம் ஒருவரை காப்பாற்றி வைக்க வேண்டும். நாம் அடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் விளையாட இருக்கிறோம். இவர்களை நாம் டி-20 உலகக் கோப்பையிலும் விளையாடுவோம். வருணின் மர்ம பந்துவீச்சு மிகவும் முக்கியமான அம்சம். எனவே அவரை அதிகம் விளையாட வைத்து தென் ஆப்பிரிக்காவுக்கு நாம் வெளிப்படுத்தக் கூடாது”
“எனவே வருண் மற்றும் குல்தீப் இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதை நான் தவிர்ப்பேன். இவர்கள் டி20 உலகக் கோப்பையில் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் வருணின் மர்மத்தை நாம் எதிரணிகளுக்கு காட்டிக் கொடுக்கக் கூடாது. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நாம் நாக் அவுட் போட்டியில் விளையாட வேண்டி வரலாம்”
இதையும் படிங்க : தெ.ஆ முதல் டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் பார்க்கும் WC ஒத்திகை.. இவர்களுக்கே வாய்ப்பு
“வருணை புரிந்து கொள்வதற்கு தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் நேரம் கொடுக்காதீர்கள். அவருக்கு எதிராக அவர்கள் எவ்வளவு அதிகம் விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு மர்மத்தை கண்டுபிடித்து விடுவார்கள். மர்மம் மர்மமாகவே இருக்கட்டும்” என்று கூறி இருக்கிறார்.