இந்திய கிரிக்கெட்

எங்க டீம் கிட்ட இருந்த அந்த பழக்கம்.. இப்ப கம்பீர் கில் டீம் கிட்ட இல்ல.. சப்பையா இருக்கு – அஸ்வின் வருத்தம்

தற்போதைய இளம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மிகவும் சுமாராக இருப்பதாகவும், தாங்கள் விளையாடிய காலத்தில் அணி அந்த விஷயத்தில் சிறப்பாக இருந்ததாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி சொந்த மண்ணில் ஒன்றுக்கு இரண்டு என தோற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி இருக்கிறார். கேப்டன் கில் இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தாலும் கூட விக்கெட் தந்த விதம் மோசமாக இருந்தது.

இது மூன்றுக்கு ஜீரோதான்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் இருக்கிறது. அதில் விஷயங்கள் சரியாக நடக்கும் பொழுது நாம் இதை எல்லாம் மறந்து விடுவோம். ஆனால் டி20 உலக கோப்பை தொடரும் மேலும் ஐபிஎல் தொடரிலும் நமது வீரர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் பிரஷர் அதிகமாகும்”

“அதே சமயத்தில் எல்லாம் சரியாக நடந்தால் இந்த தொடரின் தோல்வி மறந்து போய்விடும். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் நாம் எடுத்துக் கொண்டால் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி போராடிய விதத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் இந்தத் தொடரை மூன்றுக்கு ஜீரோ என வென்றதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்”

- Advertisement -

ரெஸ்பான்ஸ் இல்ல

“இந்திய அணியின் பி டீம் அல்லது சி டீம் எது விளையாடினாலும் வெல்லும் என நான் நினைத்தேன்.ஆனால் தற்போது சூழ்நிலைகள் எனக்கு கவலை தருகிறது. இது இந்திய அணியின் தரம் பற்றிய விஷயம் கிடையாது. இவர்கள் எதிரணிக்கு, அழுத்தத்திற்கு தரக்கூடிய ரெஸ்பான்ஸ் மிகவும் சப்பையாக இருக்கிறது”

இதையும் படிங்க : இந்திய அணி அந்த சிறப்பு தகுதி விராட்டுக்கு மட்டுமே இருக்கு.. 45 வயசு வரைக்கும் ஆடணும் – சைமன் டால் பேட்டி

“முன்பு எப்போதெல்லாம் அழுத்தம் வந்ததோ, அப்போதெல்லாம் அதிலிருந்து வெளிவருவதற்கு இந்திய அணி வழிகளை கண்டுபிடித்தது. அந்தப் பழக்கம் அணிக்கு இருந்தது. ஆனால் இந்த முறை இந்திய அணி அழுத்தத்திற்கு ரெஸ்பான்ஸ் செய்த விதம் மிகவும் மந்தமாக இருந்தது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. நாம் அவர்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. நாம் கொஞ்சம் ஷாஃப்ட் கிரிக்கெட் விளையாடியதாக நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Ravi Ashwin