கோலிக்கு பந்து வீச புடிக்காது.. அவரும் சச்சினும் அந்த வேலையை ஒரே மாதிரி செய்வாங்க – பாக் வாசிம் அக்ரம்

0
398

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு சீசனை அருமையாக தொடங்கி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் சிறந்த ஃபார்ம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். இந்த சூழ்நிலையில் இந்த மூவரும் தற்போது ஐபிஎல் டி20 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐபிஎல் கிரிக்கெட் பொருத்தவரை விராட் கோலி கடந்த 2016 ஆம் ஆண்டு உச்சகட்ட பார்மில் இருந்தார். அந்த தொடரில் மட்டும் நான்கு சதங்கள் உட்பட 973 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலியே இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடாவிட்டாலும் சீராக விளையாடி வரும் விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் வாசிம் அக்கரம் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இவருக்கு பந்து வீசுவது கடினம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நம்பிக்கை, அவரது திறமை அதற்கு மேல் அவருடைய பேட்டிங் நுட்பம். குறிப்பாக விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் லேப் சாட் விளையாடுவதை நீங்கள் பார்த்ததில்லை. விராட் கோலி எப்போதும் சரியான ஷாட்களை முழு முகத்துடன் விளையாடுகிறார். அதனால்தான் விராட் கோலி மிகவும் சீராக இருக்கிறார். ஒரு பந்துவீச்சாளராக நான் அவரை நோக்கி பந்து வீச வேண்டி இருந்தால் அது குறித்து நான் கவலைப்படுவேன்.

இதையும் படிங்க:என் பையன் யுவராஜ், இந்திய கிரிக்கெட்டுக்காக இதை செய்வேன்னு வாக்கு கொடுத்துருக்கார் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய போது, அவருக்கு பந்து வீச மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் ஒரு பேட்ஸ்மேன் ஆக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஒரு பேட்ஸ்மேன் ஆக விராட் கோலி ஆகிய இருவரும் அவர்களை வெளியேற்ற சிறிது கூட வாய்ப்புகளை தர மாட்டார்கள்” என்று வாசிம் கூறியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் வடிவ கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து அந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -