சூர்யா பேட்டிங் பத்தி குறை சொல்றவங்க.. உள்ள வந்து இந்த 2 விஷயத்தை பாருங்க.. மாஸ் பண்றார் – அஸ்வின் பேச்சு

0
37
Surya

தற்போது இந்திய t20 அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேட்டிங் சுமாராக இருந்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சூரியகுமார் யாதவியின் பெயர் 15வது இடத்தில் இருக்கிறது. அவரைவிட அதிகமாக பாகிஸ்தானின் ஷாகின் ஷா அப்ரிடி ரன்கள் எடுத்திருக்கிறார். இதன் காரணமாக அவரது பேட்டிங் மீது விமர்சனங்கள் இருந்து வருகிறது.

- Advertisement -

கேப்டன் பொறுப்புக்கு பிறகு…

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமித்த பிறகு அவருடைய ரன் ஆவரேஜ் மிகவும் குறைவாக மாறிவிட்டது. கடைசி 13 போட்டிகளில் அவருடைய ரன் ஆவரேஜ் வெறும் 18 என்று இருக்கிறது. அதே சமயத்தில் ஸ்டிரைக் ரேட் கூட 118 என மிகவும் சுமாராக மாறியிருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக இது குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மிடில் வரிசையில் வந்து 700 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கின்ற சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்தார். இதனால் மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு வந்து விட்டதால் ஆசியக் கோப்பையில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

- Advertisement -

இதுதான் காரணம்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “சூரியகுமார் யாதவ் பேட்டிங்கை பொறுத்த வரையில் அவர் கேப்டன் பொறுப்புக்கு வந்த பிறகு அவருடைய ரன் ஆவரேஜ் குறைந்து விட்டதாக மக்கள் பேசுகிறார்கள். ஆனால் அங்கிருந்துதான் ஒரு புதிய பிராண்ட் கிரிக்கெட் பிறந்தது. அவர் தன்னுடைய சராசரி 40 ஆக இருப்பதை விரும்பவில்லை. டி20 கிரிக்கெட்டில் நாம் ரன் சராசரியை பார்க்கக்கூடாது. சூரியகுமார் யாதவ் அதிக ஆபத்துள்ள கிரிக்கெட்டை விளையாடுகிறார். இது அற்புதமானது”

இதையும் படிங்க: எங்க பாகிஸ்தான் பைனலில் இதை நிச்சயம் செய்யும்.. அந்த 2 பேருக்கு குறி வைக்கணும் – வாசிம் அக்ரம் விருப்பம்

“ரோகித் தன்னுடைய விக்கட்டுக்கு எந்த விலையும் வைக்காமல் ஆக்ரோஷமாக விளையாடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார். இதில் மிகவும் உறுதியாக இருந்த அவர் நிரூபித்தார். தற்போது சூரியகுமார் யாதவும் இதையே பின்பற்றி வருகிறார். மேலும் அவர் மூன்றாவது இடத்தில் மட்டும் இல்லாமல் பல இடங்களில் பேட்டிங் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -