இந்திய கிரிக்கெட்

சூரியகுமார் அப்படி அவுட் ஆனதுதான் சரி.. ஷிவம் துபே பத்தி டீம்ல அதை பேசிகிட்டு இருக்காங்க போல – அஸ்வின் கருத்து

இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியக்குமார் யாதவ் அவுட்டான விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பைக்கு எந்த பிளேயிங் லெவன் சரியாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்புக்கு சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவருடைய பேட்டிங் ஃபார்ம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் பார்முக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தது. நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆரம்பித்த அவர் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. இது இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய உதவியாக அமைந்தது.

இதுதான் சரியானது

இதுகுறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நேற்று சூரியகுமாருக்கு கிடைத்த ரன்கள் அவருடைய மனதில் இருந்து பெரிய அழுத்தத்தை வெளியேற்றியது போல இருந்திருக்கும். அவருடைய பேட்டிங் அணுகுமுறை மற்றும் பார்ம் குறித்து நிறைய பேர் வெளியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒரே மாதிரியாக விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என அவசியமில்லை”

“எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அவர் நேற்று நல்ல டச்சில் இருந்தார். சிறப்பாக ஆரம்பித்து விளையாடினார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் மேற்கொண்டு சாதாரணமாக ரன்கள் எடுக்க விரும்பி இருந்தால் அரைசதம் அடிக்க நினைத்திருப்பார். ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. அவர் அதிரடியாக விளையாட சென்று ஆட்டம் இழந்தார்”

- Advertisement -

அவர்களுக்கான தீம் இருக்கு

“இந்த டி20 அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு என்று ஒரு தீம் இருக்கிறது. அதன்படியே எல்லோரும் அடித்து விளையாட நினைக்கிறார்கள். சூரிய குமாருக்கு ரன்கள் இல்லாதபோதும் கூட அவர் மெதுவாக விளையாட நினைக்கவில்லை. அதிரடியாகவே சென்று விளையாடினார். அதுதான் சரியானது”

இதையும் படிங்க: அபிஷேக் சர்மா பேட்டிங் எனக்கு பிடிக்கும்.. அவர் காற்றில் சுத்துற ஆள் இல்ல.. இந்த டேலண்ட் இருக்கு – ரோகித் சர்மா பேச்சு

“நேற்று விளையாடிய பிளேயிங் லெவன்தான் உலக கோப்பைக்கு சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். அர்ஸ்தீப் இடத்தில் ஹர்ஷித் ராணா வரலாம் என்று நினைக்கலாம். ஆனால் இவர்தான் சரியானவர். ஒருவேளை சிவம் துபேவின் இடத்திற்கு இன்னொரு முழுமையான பலரை யோசிக்கலாம். ஆனாலும் நேற்று அவருக்கு மூன்று ஓவர்கள் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவரால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க அணிக்குள் பேச்சுவார்த்தை செல்கிறது என்று தெரிகிறது” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts