இந்திய டி20 அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பேட்டிங் குறித்து முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
நேற்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முதல் டி20 போட்டியில் 35 பந்துகளில் அபிஷேக் சர்மா அதிரடியாக 84 ரன்கள் எடுத்தார். சதம் அடிப்பதற்கு அருகில் இருந்த போதும் கூட வேகத்தை அவர் நிறுத்தவில்லை. அதன் காரணமாகவே விக்கெட் இழந்தார். ஆனால் அவர் அப்படி விளையாடுவதுதான் சிறந்த தொடக்கத்தை கொடுக்கிறது.
யுவராஜ் சிங்கின் அறிவுரை
அபிஷேக் ஷர்மாவின் குருவான யுவராஜ் சிங் வைக்கட்டுக்கு மரியாதை கொடுத்து விளையாடி பெரிய ரன்களை அடிக்க வேண்டும் என எப்போதும் சொல்லி வந்தார். ஆனால் அபிஷேக் ஷர்மா ஒரு கட்டத்தில் விக்கட்டுக்கு மரியாதை கொடுத்தால் தன்னால் பெரிய அளவுக்கு விளையாட முடியவில்லை என்பதை உணர்ந்ததாகவும், எனவே அதை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் நேற்று பேசிய அபிஷேக் ஷர்மா தான் பந்தை அடித்து நொறுக்க மட்டுமே நினைப்பது கிடையாது எனவும், பந்தை டைமிங் செய்து விளையாட நினைக்கிறேன் என்றும், அதற்கேற்ற வகையில் தான் தன்னுடைய பயிற்சி முறைகளையும் அமைத்திருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
ரோஹித் சர்மா பாராட்டு
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது அபிஷேக் ஷர்மா ஒவ்வொரு பகுதியிலும் கணக்கிட்டு சரியாக விளையாடுவதாகவும் அவருடைய பேட்டிங் அணுகுமுறை தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : டாட் பந்து போட வழியே இல்லை.. இந்தியா கிட்ட முதல் பந்தில் இருந்து எச்சரிக்கையா இருக்கணும் – மிட்சல் சான்ட்னர் பேச்சு
இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது ” அபிஷேக் ஷர்மா என்ன செய்கிறார் என்பது தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர் மிகவும் கணக்கிட்டு துல்லியமான முறையில் பேட்டிங் செய்கிறார். எக்ஸ்ட்ரா கவர், இன்சைட் லைன், டீப் மிட் விக்கெட் மற்றும் பைன் லெக் வரை அவர் மிகவும் திட்டமிட்டு ரன் அடிக்கிறார். தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடுகிறார். அவர் ஆரம்பத்தில் உருவாக்கும் அடித்தளம்தான் போட்டிகளை வெல்ல உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.






