எனக்கு வாஷிங்டன் சுந்தர் வேண்டாம்.. சிஎஸ்கே பிளேயரும் இருக்க மாட்டார்.. ஆசிய கோப்பை இந்திய அணி இதுதான் – அஸ்வின் கணிப்பு

0
81
Ashwin

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது ஆசிய மற்றும் உலக சாம்பியனாக டி20 வடிவத்தில் இந்திய அணி இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடர் t20 வடிவத்தில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணி கட்டாயம் தொடரை வெல்ல வேண்டும் என்பதால் அணித் தேர்வு மிகவும் கடினமானதாக மாறியிருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே வீரர் வெளியேறுவார்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யலாம். இதற்கு அடுத்து நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் தேவைக்கு தகுந்தபடி திலக் மற்றும் கேப்டன் சூரியகுமார் இருவரும் வரலாம். நீங்கள் ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டு வந்தீர்கள் என்றால் நிச்சயமாக சிவம் துபேவுக்கு வாய்ப்பு அங்கு கிடையாது”

“சிவம் துபே மாற்று வீரராக வேண்டுமானால் வரலாம் அதற்கும் வாய்ப்பு குறைவு. மேலும் தொடர்ந்து ஆறு மற்றும் ஏழு, எட்டாவது இடங்கள் மிகவும் முக்கியமானது. இதில் ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் உறுதியாக இருப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது”

- Advertisement -

எனக்கு வாஷிங்டன் வேண்டாம்

“எட்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் இடையே போட்டி இருக்கும். என்னுடைய தேர்வு குல்தீப்தான். வாஷிங்டன் சுந்தர் கிடையாது. இதற்கு அடுத்து பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் வருவார்கள். பதினோராவது இடத்தில் வருண் சக்கரவர்த்தி இருப்பார். அவர் டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங்கில் ஓரளவுக்கு உழைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 2024 டி20 WC பைனல்.. பவுண்டரி கயிறு தள்ளி வைக்கப்பட்டது.. சூர்யா கேட்ச் தவறானது – அம்பதி ராயுடு பேட்டி

மேலும் இன்று ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் தற்போது அங்கு மழை பெய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி அறிவிப்பு தள்ளிப் போகின்றது என்று கூறப்படுகிறது.

- Advertisement -