நேற்று இந்தியா அணிக்கு எதிராக அரை சதம் அடித்து துப்பாக்கியில் சுடுவது போல் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் பர்ஹான், அந்த கொண்டாட்டம் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் பர்ஹான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அபிஷேக் ஷர்மா வீண் அடித்தார். இதன் காரணமாக அவருக்கு அரை சதம் வந்ததோடு, மேலும் பாகிஸ்தான் அணியும் சவாலான சோறை எட்ட அது உதவியாக அமைந்தது.
பும்ராவுக்கு எதிரான ஸ்பெஷல்
உலக கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சுக்கு எதிராக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய தொடக்க ஆட்டக்காரர் பர்ஹான் அவரை மிகவும் சுலபமாக விளையாடுகிறார். இரண்டு போட்டிகளிலும் அவரிடம் இருந்து நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார்.
மேலும் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய பர்ஹான் 45 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் குவித்தார். அரை சதம் அடித்ததும் துப்பாக்கியால் சுடுவது போல கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகின்ற காரணத்தினால் இந்த கொண்டாட்டம் விமர்சனமாக மாறியிருக்கிறது.
அந்த நொடியில் நடந்தது
இதுகுறித்து பர்கான் பேசும்பொழுது “அந்த கொண்டாட்டம் அந்த ஒரு நொடி நேரத்தில் உண்டானதுதான். பொதுவாக 50 ரன்கள் எடுத்தால் நான் பெரிய கொண்டாட்டங்கள் எதுவும் செய்வது கிடையாது. நேற்று ஒரு கொண்டாட்டத்தை செய்யலாம் என்று தோன்றியது. நான் அதைச் செய்தேன். ஆனால் மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி கவலையும் இல்லை”
இதையும் படிங்க : பாகிஸ்தான் வீரர்கள் பர்சனல் பேசி திட்டினாங்க.. இது கிரிக்கெட் ஆடற முறை இல்ல – அபிஷேக் ஷர்மா வருத்தம்
“மற்றபடி நீங்கள் எங்கு யாருக்கு எதிராக விளையாடினாலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். அது இந்தியாவா இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இன்று நாங்கள் விளையாடியது போல ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






