சஞ்சு சாம்சனுக்கு அநியாயம் பண்ணிடாதீங்க.. அது எப்படி தப்பா இருக்க முடியும்? – அஸ்வின் ஆதரவு

0
3
Sanju

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் திலக் பர்மா இல்லாததால் இரண்டாவது விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் விளையாடும் அணியில் இடம் பிடித்து அதிரடியாக விளையாடி தன்னை நிரூபித்து இருக்கிறார். எனவே அவரைத் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் ஷர்மாவுடன் விளையாட வைக்க வேண்டும் என இப்பொழுதே பேச்சுகள் ஆரம்பமாகி இருக்கிறது.

- Advertisement -

WV.ராமன் வெளியிட்ட கருத்து

இந்திய முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான WV. ராமன் சஞ்சு சாம்சனின் பேட் டவுன் ஸ்விங் எல்லா நேரத்திலும் ஒரே போல இருப்பதாகவும், அதை பந்தின் வேகத்துக்கு தகுந்த அளவு மாற்ற வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அதாவது வாகனத்தை எல்லா சாலைகளிலும் ஒரே வேகத்தில் ஓட்ட முடியாது. அதுபோல பேட்டையும் ஒரே வேகத்தில் கீழே கொண்டு வரக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.

தற்போது சஞ்சு சாம்சன் சீராக ரன்கள் எடுக்காதது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அவர் எப்பொழுது ஆட்டம் இழப்பார் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு போட்டியில் 100 ரன்கள் எடுத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகவும் செய்கிறார். இந்த சீரற்ற தன்மையை அவருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சனை விடக்கூடாது

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ஒருவேளை அவரை தொடக்க இடத்திலிருந்து நீக்கி விட்டால் அது மிகவும் அநியாயமானதாக இருக்கும். அபிஷேக் ஷர்மாவுடன் மீண்டும் சஞ்சு சாம்சனை துவக்க ஆட்டக்காரராக கொண்டு வந்து மொத்தம் இரண்டு போட்டிகள்தான் ஆகிறது. ஒரு வீரர் தாக்குதல் பாணியில் விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்துவிட்டால், அவரை நீங்கள் நீக்கக் கூறுகிறீர்கள் என்றால் எப்படி அவரிடம் நம்பிக்கையை எதிர்பார்க்க முடியும்? “

இதையும் படிங்க : இந்தியாவுக்கு ஒரு நியாயம் பங்களாதேஷ்க்கு ஒரு நியாயமா?.. ஐசிசி செய்வது அப்பட்டமான தப்பு – கில்லஸ்பி விமர்சனம்

“அவர் அவசரத்தாலோ இல்லை பதட்டத்தாலோ ஆட்டம் இழக்கவில்லை. அவர் அதிரடியாக விளையாட வேண்டும் என்று சென்று ஆட்டம் இழந்தார். அவர் பந்தை பார்த்தால் அதற்கு ஏற்ற வகையில் விளையாட சென்று அவுட் ஆனார். ஒரு பேட்ஸ்மேன் அப்படித்தான் ஆட வேண்டும். ஆனால் அந்த நாளில் அது அவருக்கு சாதகமாக இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -