இந்தியாவுக்கு ஒரு நியாயம் பங்களாதேஷ்க்கு ஒரு நியாயமா?.. ஐசிசி செய்வது அப்பட்டமான தப்பு – கில்லஸ்பி விமர்சனம்

0
89
Gillespie

பங்களாதேஷ் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறது. இதில் ஐசிசி ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேஷன் கில்லஸ்பி தெரிவித்து இருக்கிறார்.

நேற்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து தாங்கள் விலகுவதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே தங்கள் போட்டிகளை மாற்ற ஐசிசி சம்மதிக்காததால் இந்த முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எடுத்து இருக்கிறது.

- Advertisement -

கில்லஸ்பி விமர்சனம்

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டன. தற்போது பங்களாதேஷ் அணி இதே கோரிக்கையை வைத்த பொழுது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கில்லஸ்பி பேசும் பொழுது “இந்தியாவுக்கு வெளியே பங்களாதேஷ் ஏன் விளையாட முடியாது என்பதற்கான விளக்கம் ஐசிசி கொடுத்துவிட்டதா? நாம் பின்னோக்கிப் பார்த்தால் இதே போல இந்தியா பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை விளையாட முடியாது என மறுத்தது. அவர்களுக்கு ஐசிசி அனுமதி கொடுத்தது. இது குறித்து யாராவது அர்த்தத்தோடு விளக்க முடியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

- Advertisement -

அப்ரிடி வருத்தம்

இதுகுறித்து சாகித் அப்ரிடி பேசும் பொழுது ” பங்களாதேஷிலும் மற்றும் ஐசிசி தொடர்களிலும் விளையாடியவன் என்ற முறையில் எனக்கு இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஐசிசியின் சீரற்ற தன்மையால் நான் ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். எங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு காரணமாக இந்தியா வர முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். பங்களாதேஷ் விஷயத்தில் அதே முறை பயன்படுத்தப்படவில்லை”

இதையும் படிங்க : 11 போட்டிகள்.. முடிவுக்கு வந்த இங்கிலாந்து சோகம்.. புரூக் வித்தியாச ஆட்டம்.. இலங்கை அணி சொந்த மண்ணில் தோல்வி

“நிலைத்தன்மையும் நியாயமும்தான் உலக கிரிக்கெட்டின் அடித்தளம். பங்களாதேஷ் அணியும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களும் ஒரு தலைப்பட்சமான தீர்ப்புகளுக்காக இல்லை. அவர்கள் மரியாதைக்குரியவர்கள். ஐசிசி நட்பு பாலங்களை கட்ட வேண்டும் அதை எரிக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -