இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ருதுராஜுக்கு எதற்காக தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற காரணத்தை பேசி இருக்கிறார்.
கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் காயம் அடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ருதுராஜ் வாய்ப்பு பெற்று விளையாடினார். முதல் போட்டியில் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினாலும் இரண்டாவது போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு பொறுமையாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி ரசிகர்களை ஈர்த்தார்.
83 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 12 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் என 102 ரன்கள் குவித்து தனது மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிலர் தாங்கள் சிறப்பாக செயல்படும் காரணத்தினால் தங்களுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் ருத்ராஜ் போன்ற வீரருக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதே இல்லை என்று பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறி இருக்கும் போது “சில வீரர்களுக்கு வெளிப்புற சத்தம் என்பது உடனடியாக கழுத்தின் மீது ஏறிக்கொள்ளும். சிலர் தாங்கள் திறமையானவர்கள் என்றும் தங்களுக்கு நீண்ட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் சத்தம் போடுகிறார்கள். ஆனால் அந்த சத்தம் எப்படி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் ருத்ராஜுக்கு அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் நீண்ட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. சில நேரங்களில் அவர் காயமடைந்திருக்கிறார் என்றாலும் இது துரதிர்ஷ்டவசமானது.
இதையும் படிங்க:2025 ஐபிஎல் மினி ஏலம்.. சிஎஸ்கே பிளான் மாறிடுச்சு.. இந்த 2 பேர கட்டாயம் வாங்குவாங்க – அஸ்வின் நம்பிக்கை
அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் சிறப்பாக உள்ளன. அவர் வேகப்பந்துவீச்சாளர்களை நன்றாக எதிர்கொண்டு விளையாட முடியும். ஒருவேளை பந்து நன்றாக ஸ்விங் ஆனால் மட்டுமே அவரை வெளியேற்ற முடியும். ஆனால் அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தால் இந்த பிரச்சனைகள் வராது. ஸ்பின் வீரர்களை இவரால் மிகச் சிறப்பாக கையாள முடியும். விக்கெட்டுகளுக்கு இடையில் சிறப்பாக ஓடும் திறமை இவரிடம் உள்ளது” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.






