ரிக்கி பாண்டிங் ஸ்ரேயாசுக்கு அண்ணன் மாதிரி.. அவர் கடைசி வீரருக்காக கூட இதை செய்வார் – அஸ்வின் பேச்சு

0
4
Ashwin

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடையில் அண்ணன் தம்பி உறவு முறை இருப்பதாக ரவிச்சந்திரன் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

இந்த ஜோடி நீண்ட வருடங்களுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு எடுத்துச் சென்றதுடன் இறுதிப் போட்டிக்கும் கூட்டிச் சென்றார்கள். மேலும் இந்த ஆண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அண்ணன் தம்பி போன்றவர்கள்

இந்த நிலையில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அணியின் ஒட்டுமொத்த பொறுப்பையும் எடுத்துக்கொண்டு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீதான சுமையை எடுத்து விடுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அஸ்வின் பேசும்பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் அமைதியான குணம் கொண்டவர். அவர் ரிக்கி பாண்டிங்கிடம் ஆலோசனைகளை விரும்பி கேட்கிறார். அவற்றை கவனமாக பின்பற்றுகிறார். இருவருக்கும் இடையில் அண்ணன் தம்பி போன்ற ஒரு உறவு இருக்கிறது. ரிக்கி எப்பொழுதும் தனக்கு ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கை ஸ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கிறது”

- Advertisement -

பாண்டிங் இப்படிப்பட்டவர்தான்

“ரிக்கி பாண்டிங் அணியை சிறப்பாக நிர்வாகம் செய்கிறார். இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மீதான அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அவர் தனது பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவதோடு, அமைதியாகவும் தன்னம்பிக்கை உடனும் தலைமையை ஏற்க முடிகிறது. இவர்களின் கூட்டணி நல்லதாக இருக்கிறது என நாம் வெளிப்படையாக பார்க்க முடிகிறது”

இதையும் படிங்க : இன்னொரு இங்கிலாந்து வீரருக்கு ஐபிஎல்-ல் இரண்டு ஆண்டுகள் தடை… வெளியான புதிய செய்திகள் – காரணம் என்ன?

“ரிக்கி பாண்டிங் எப்பொழுதும் வலைப்பயிற்சியில் இறுதி வரை நிற்பார். வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரருக்கு கூட அவர் கடைசி வரையில் இருப்பார். அவர்களுக்காகவும் அவர் நேரம் ஒதுக்குவார். அவர் அங்கிருந்து பாதியில் போய் விடமாட்டார். கடைசி வரை அங்கேயே இருந்து எல்லோருக்கும் சரியான வசதியும் கவனமும் கிடைப்பதை உறுதி செய்வார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -