இன்னொரு இங்கிலாந்து வீரருக்கு ஐபிஎல்-ல் இரண்டு ஆண்டுகள் தடை… வெளியான புதிய செய்திகள் – காரணம் என்ன?

0
130
IPL

2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஒருவர் அறிவித்திருக்கிறார். அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட இருக்கிறது.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் இங்கிலாந்து வீரர்கள் அவர்களுடைய விருப்பத்திற்கு தொடர்ந்து ஏலத்திற்கு பிறகு விலகிக் கொண்டே இருப்பது வாடிக்கையாகியுள்ளது. தற்பொழுது இந்த சம்பவம் ஐபிஎல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஹாரி புரூக் ஏற்படுத்திய சம்பவம்

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் ஏலத்திற்கு பிறகு இரண்டு முறை தற்போதைய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வர முடியாது என அறிவித்திருக்கிறார். கடந்த மெகா ஏலத்தில் வாங்கப்பட்டு ஐபிஎல் தொடருக்கு வர முடியாது என அறிவித்தார்.

இதன் காரணமாக அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கோபத்தில் உள்ளார்கள்.

- Advertisement -

மீண்டும் இன்னொரு வீரர்

தற்போது இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக டெல்லி அணிக்கு வாங்கப்பட்ட பென் டக்கெட் அறிவித்திருக்கிறார். மேலும் தனக்கு 31 வயதாவதால் இத்துடன் தன்னுடைய ஐபிஎல் வாழ்க்கையும் முடிந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் லீக்கை விட்டு.. சிஎஸ்கேவுக்கு வரும் சிஎஸ்கேவுக்கு வரும் புதிய வீரர்.. எல்லிஸ்க்கு மாற்று கிடைத்தது

மேலும் ஐபிஎல் தொடரில் ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு தனிப்பட்ட சாதாரண காரணங்களுக்காக யார் விலகினாலும் அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்படி இவருக்கும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -