தற்போது திலக் வர்மா காயம் அடைந்திருப்பதால் நியூசிலாந்து டி20 தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவருடைய இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்கின்ற காரணம் குறித்து பார்க்கலாம்.
மேலும் திலக் வர்மா இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரியான் பராக் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக விளையாடினால் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு கூட உண்டு. ஜனவரி 30 வரையில் டி20 உலக கோப்பை அணிகள் மாற்றங்கள் செய்ய முடியும்.
ஸ்ரேயாஸ் ரியான் பராக்
டி20 உலக கோப்பைக்கு காயமடைந்திருக்கும் திலக் வர்மா மீண்டும் திரும்பி வந்துவிடுவார் என்று உறுதியாகவே கூறப்படுகிறது. இதனால் அவருடைய இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயரை தற்காலிகமாக தேர்வு செய்வதை விட, ரியான் பராக்கை தேர்வு செய்வது சரியானதாக இருக்கும்.
காரணம், ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட்டால், அவர் முழுமையான பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர ஆப் ஸ்பின்னர் என்கின்ற காரணத்தினால் வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு கூட டி20 உலகக் கோப்பையில் இடம் பெற முடியும். அப்படி அவரிடம் பெற்றால் அக்சர் படேல் விளையாட முடியாத சூழ்நிலையில் அந்த இடத்தில் விளையாடலாம்.
இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தர வேண்டும்
அதே சமயத்தில் நியூசிலாந்து டி20 தொடரில் திலக் வர்மா இடத்தில் இஷா
ன் கிஷானுக்கு வாய்ப்பு தருவது முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக மட்டும் இல்லாமல், பேக்கப் பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க : கில் பிசிசிஐ கிட்ட கேட்ட இந்த விஷயம்.. அவர ஒரு தலைவரா மாத்திடுச்சு.. ரொம்ப அருமை – ராபின் உத்தப்பா பேச்சு
எனவே திலக் வர்மா இல்லாத நிலையில் அவர் விளையாடுவது நல்ல போட்டி பயிற்சியாக அமையும். ஒருவேளை டி20 உலகக் கோப்பையில் பேட்ஸ்மேன் யாராவது காயமடைந்தால், அவர் நேரடியாக பிளேயிங் லெவன்த் வந்து விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். இந்த காரணத்தினால் அவரே விளையாட வேண்டும்.






