டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான அணி நிச்சயம் விளையாடும் என ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கி இருக்கிறார்.
பாகிஸ்தான் அரசாங்கம் திடீரென இந்திய அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது என அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு அணிகளும் பொதுவான ஒரு இடத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு அவர்கள் இப்படி செய்ததை ஐசிசி ஏற்றுக்கொள்ளாது என பலரும் கூறி வருகிறார்கள்.
பாகிஸ்தான் பின்வாங்கும்
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் விளையாடும் என பல முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
மிக முக்கியமாக பாகிஸ்தான் உள்நாட்டில் நடக்கும் பிஎஸ்எல் டி20 தொடருக்கு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்படும். இது அந்தத் தொடருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய சரிவை உண்டாக்கும். இதன் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் முடிவை எடுக்கும் என்று பேசப்படுகிறது.
பாகிஸ்தான் முடிவை மாற்றும்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “100% இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குள் பாகிஸ்தான் தாங்கள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும். நான் இந்த போட்டியை நிச்சயம் பார்ப்பேன்”
“பாகிஸ்தான் விளையாடாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்கும். மேலும் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிகளுக்குமே இதனால் நிதி இழப்பு ஏற்படும். அவர்கள் பாகிஸ்தானால் தங்களுக்கு இவ்வாறான இழப்பு ஏற்பட்டதாக ஐசிசி அமைப்பிடம் புகார் செய்வார்கள். இதனால் பிஎஸ்எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு என்ஒசி கிடைக்காது. இது அவர்களுக்கு பெரிய பிரச்சினையை உண்டாக்கும்”
இதையும் படிங்க : இந்தியாவுடன் விளையாட எங்க பாகிஸ்தான் மறுத்தது நியாயமா?.. என் நிலைப்பாடு இதுதான் – ஷாகித் அப்ரிடி பேச்சு
“பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரு நடுநிலையான இடத்தில் விளையாட போகிறது. இப்படி இருக்கும் பொழுது நான் விளையாட மாட்டேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. மேலும் அவர்கள் வலிமை குறைவு என சொல்ல முடியாது. அவர்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியை கடைசிவரையில் எடுத்துச் சென்றாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் அவர்களுடைய மிகப்பெரிய எதிரியே அவர்கள்தான். ஏனென்றால் உலக கோப்பையில் இந்திய அணியை கட்டாயம் வெல்ல வேண்டும் என்று சொல்வது பெரிய பாதிப்பை உண்டாக்கும்” என்று கூறியிருக்கிறார்.






