அடுத்த சில நாட்களில் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருப்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அரசாங்கம் தங்களுடைய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் அதே நிலையில் இந்திய அணி உடனான போட்டியில் மட்டும் விளையாடாது என அதிரடியாக அறிவித்து கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் மசியாது
மேலும் ஐசிசியில் உயர்மட்ட பொறுப்பில் இருந்த ஒருவர் கூறும் பொழுது கடந்த 20 வருடங்களாக இந்திய அணியின் ஆதரவு இல்லாமலே பாகிஸ்தான் கிரிக்கெட் நல்ல முறையில் வளர்ந்து வந்திருப்பதாகவும், எனவே ஐசிசி அச்சுறுத்தல்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மசியாது என்றும் கூறியிருக்கிறார்.
அதே சமயத்தில் ஐசிசி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணியை டி20 உலக கோப்பை தொடரிலிருந்து நீக்குவதற்கு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வருகிறது. மேலும் பாகிஸ்தானுக்கு சென்று எந்த அணியும் விளையாட கூடாது என்ற தடையை விதிக்கவும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இது நடந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதே உண்மை.
ஷாகித் அப்ரிடி கருத்து
இந்திய மணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடது என தங்கள் அரசாங்கம் அறிவித்திருப்பது தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பரபரப்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : நான் பேட்டிங் செய்ய கஷ்டப்பட்ட 2 பவுலர் இவங்கதான்.. அதுல இவருக்கு பரிதாபமே கிடையாது – இஷான் கிஷான் தகவல்
இதுகுறித்து ஷாகித் அப்ரிடி பேசும் பொழுது “டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடாது என்ற அறிவிப்பு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இருந்த போதிலும் கூட நான் என்னுடைய அரசாங்கத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயத்தில் ஐசிசி அமைப்பு தாங்கள் நடுநிலையானவர்கள் நிரூபிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






