நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி தேர்வு குறித்தது முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் விளையாட வைக்கப்படவில்லை. தென் ஆப்பிரிக்க ப்ளேயிங் லெவனில் மூன்று முக்கிய இடதுகை வீரர் இருக்கின்ற காரணத்தினால் வாஷிங்டன் சுந்தர் விளையாட வைக்கப்பட்டார். ஆனால் இந்த முடிவு தற்போது பெரிய விமர்சனமாக மாறி உள்ளது.
ஐபிஎல் கிடையாது
மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் விராட் கோலி உடன் இணைந்து அக்சர் படேல் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். எனவே நேற்றைய போட்டியில் அவர் விளையாட வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “நீங்கள் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கு எந்த பவுலரை விளையாட வைக்கிறீர்கள் என்பதெல்லாம் ஐபிஎல் தொடரில் யோசிக்கலாம். ஏனென்றால் உங்களுக்கு 14 போட்டிகள் விளையாட வேண்டி இருக்கும். அதனால் இதை செய்யலாம். ஆனால் சர்வதேச போட்டிகளில் நிலைத்தன்மை மிகவும் முக்கியம்”
அக்சர் தாழ்ந்தவர் இல்லை
“இடதுகை வீரர்களுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் 100% உடன்படுகிறேன். நீங்கள் அவரை விளையாட வைக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அக்சர் படேல் உங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் செய்துள்ளதை நாம் மறக்க கூடாது”
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரா எங்களுடைய பிளான் இதுதான்.. முதல்ல ஈகோவை விட்டுட்டு அதை செய்ய நினைச்சோம் – எய்டன் மார்க்ரம் பேச்சு
” 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். விராட் கோலியின் வழிநடத்துதல் இருந்தாலும் அவரும் நன்றாக செயல்பட்டார். அவர் யாருக்கும் தாழ்ந்த வீரர் கிடையாது. மேலும் நேற்று பேட்டிங்கில் மிடிலில் கொஞ்சம் நிலைத்தன்மை இருந்திருந்தால் இந்திய அணி இந்த ஸ்கோரை துரத்தி இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






