நேற்று இந்தியா அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் அதற்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாடிய 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இந்திய அணிக்கு அரையிறுதி செல்வதற்கான வாய்ப்புகள் கடினமானதாக மாறி உள்ளது.
திடீர் வித்தியாசம்
நேற்று இந்திய அணி பந்து வீசும் பொழுது தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் மிகவும் எளிதாக விளையாடியது போல இருந்தது. பந்து பேட்டுக்கு மிக சிறப்பான முறையில் வந்தது. டேவிட் மில்லர் மற்றும் பிரிவிஸ், டப்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணிக்கு ரன்கள் எடுத்தார்கள்.
அதே சமயத்தில் இந்திய அணி பேட்டிங் செய்யும் பொழுது பந்து பேட்டுக்கு வரவில்லை. தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் அதிகம் மெதுவான பந்துகளை வீசி இந்திய அணியை திணறடித்தார்கள். மேலும் நேற்று பீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்கா எல்லா துறைகளிலும் இந்திய அணியை வீழ்த்தியது.
இதுதான் எங்கள் திட்டம்
இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசும்பொழுது “நாங்கள் இங்கு இதுவரை விளையாடியதில் இந்த ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் எங்களுடைய பவுலர்கள் உடனடியாக ஆடுகளத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் மாறி செயல்பட்டது அற்புதமானதாக அமைந்தது. நாங்கள் அவர்களது செயல்பாட்டை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய அணி துவக்கத்திலும் இறுதியிலும் சிறப்பாக பந்து வீசியது. ஆனால் நடுவில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம்”
இதையும் படிங்க : இந்த டி20 WCல் இந்திய அணிக்கு இது சரியாவே அமையல.. அதான் நல்ல டீம் கிட்ட இப்ப மாட்டிக்கிட்டாங்க – சுனில் கவாஸ்கர் கருத்து
“நாங்கள் இறுதியாக பேசும் பொழுது ஈகோவை விட்டுவிட்டு கேப் கிடைக்கும் பகுதிகளில் கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும் கொஞ்சம் பந்து ஸ்பான்ச்சி பவுன்ஸ் உடன் காணப்பட்டது. எனவே நாங்கள் இதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். உடனடியாக சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ற வகையில் மாறி சிறப்பாக செயல்பட்ட எங்கள் பவுலர்களுக்கு பாராட்டுகள் சேரும்” என்று கூறியிருக்கிறார்.






