நான் இந்தியாவின் கேப்டன் கிடையாது.. அந்த ஒரு விஷயத்தை அவங்கதான் முடிவு பண்ணனும் – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
148
Stokes

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ள நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணி பற்றியான கேள்விக்கு மிகவும் நேர்மையான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை எட்ஜ்பஸ்ஸ்டன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் இரண்டாவது போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

மர்மமான பும்ரா

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது மர்மமான விஷயமாகவே இருந்து வருகிறது. அவர் மூன்று டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுவார் என்று இருக்கும் நிலையில், அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவரை எந்த இரண்டு போட்டிகளில் விளையாட வைப்பது என்பது குழப்பமானதாகவே இருக்கிறது.

இந்த இடத்தில் இருந்து மீதம் இருக்கும் நான்கு போட்டிகளிலும் பும்ரா விளையாடினாலும் இந்திய அணிக்கு நல்லதுதான் என்கின்ற சூழ்நிலை இருப்பதால், இந்திய அணி நிர்வாகத்தை தாண்டி இங்கிலாந்து அணி இடமும் பும்ரா குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

பும்ரா குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள பென் ஸ்டோக்ஸ் கூறும்பொழுது “இந்தியாவின் பிரச்சனையை அவர்கள்தான் சமாளிக்க வேண்டும். நான் இங்கிலாந்து அணியின் கேப்டன். அவர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : 23 ஆண்டுகள் 328 ரன்கள்.. கார்பின் போஸ் அரிய சாதனை.. தென் ஆப்பிரிக்கா எளிதான வெற்றி.. ஜிம்பாப்வே முதல் டெஸ்ட்

“இரண்டாவது போட்டி நடைபெறும் மைதானம் எங்களுக்கு மிகவும் நல்ல புள்ளி விபரங்களை வைத்திருக்கிறது. மேலும் அங்கு எங்களுக்கு நல்ல சூழ்நிலை இருக்கும். மேலும் போட்டி இரண்டு பக்கமும் சரிவிகிதத்தில் ஆரம்பித்தாலும் கூட, அங்கு எங்களுக்கு கிடைக்கும் ஆதரவு எங்களை கொஞ்சம் முன்னே வைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -