இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு இந்த 30 வயசு இந்திய வீரரை வச்சு செக் வைங்க.. குதிரை மாதிரி அவரையும் விடாதீங்க – அஸ்வின் அறிவுரை

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வீரர்களின் தேர்வு எப்படி இருக்க வேண்டும்? என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து லீட்ஸ் மைதானத்தில் வருகின்ற ஜூலை இருபதாம் தேதி துவங்குகிறது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இரண்டு அணிகளுக்குமே இது முதல் தொடராகவும் முக்கிய தொடராகவும் அமைகிறது.

பேட்டிங் யூனிட் எப்படி அமையும்?

தற்போது இந்திய பேட்டிங் யூனிட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 20 இடத்திற்கு யாரை விளையாட வைப்பது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இந்த இரண்டு இடங்களுக்கு அபிமன்யு ஈஸ்வரன் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் என மூன்று வீரர்கள் சரியானவர்களாக இருக்கிறார்கள். இதில் கருண் நாயர் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். எனவே சாய் சுதர்சனுக்கு எடுத்ததும் வாய்ப்பு கொடுக்கப்படுமா? எனத் தெரியவில்லை.

அதே சமயத்தில் இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட்டில் முகமது சிராஜ் அனுபவ வீரராக இருந்த பொழுதிலும் கழட்டி விடப்பட்டு சேர்த்தப்பட்டு இருக்கிறார். எனவே அவருக்கு எடுத்ததும் முதல் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இத்துடன் வாசிங்டன் சுந்தர் முகமது சிராஜ் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருக்கிறார். எனவே பவுலிங் யூனிட் எப்படி அமையும்? என்பதுதான் குழப்பமானதாக இருக்கிறது.

- Advertisement -

போர்க்குதிரை மாதிரி இவர்…

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுகளத்தில் ஈரப்பதத்தை அவர்கள் விடவில்லை என்றால் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்து நான் யோசிப்பேன். ஆனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தால் அவர் கட்டாயம் விளையாடும் அணியில் இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செல்கிறார்கள் என்றால் உங்களுக்கு விக்கெட் கைப்பற்றும் பந்துவீச்சாளர்கள் போட்டியை வெல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்”

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்.. ஆஸி அணி அறிவிப்பு.. ஸ்மித்தின் பரிதாப நிலைமை.. புது ஆல் ரவுண்டர் சேர்ப்பு

“பும்ரா மற்றும் ஜடேஜா இருவரும் தேர்வு பட்டியலில் பந்துவீச்சாளர்களாக முதல் இடத்தில் இருக்க வேண்டும். ஜடேஜா பந்துவீச்சில் உங்களுக்கு நல்ல கட்டுப்பாட்டை கொடுப்பதுடன் ஐந்து முதல் ஆறு இடங்களில் பேட்டிங் செய்யக் கூடியவராகவும் இருக்கிறார். இந்த பந்து வீச்சு வரிசை எந்த இடத்திலும் எந்த அணியை பேட்டிங் யூனிட்டையும் வீழ்த்தும். மேலும் நாம் முஹம்மது சிராஜையும் விட்டுவிடக்கூடாது. அவர் போர்க் குதிரை மாதிரியானவர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts