இந்திய டி20 அணிக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் கில்லை தேர்வு செய்வது குறித்து பேசி வரும் நிலையில் அவரை விட இன்னொரு இளம் வீரர் அதிக முன்னுரிமை பெறக்கூடியவராக இருப்பார் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்டில் டி20 வடிவத்தில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கு இந்திய அணியை தேர்வு செய்வதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கில்லை டி20 அணிக்கு கொண்டுவர இந்திய கிரிக்கெட் வாரியமே விரும்புகிறது என்ற செய்தி குழப்பங்களை அதிகரிக்கிறது.
ஏற்கனவே இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமானதாகவும் இடது-வலது கை காம்பினேஷன் மிகச் சரியாகவும் பொருந்தி இருக்கிறது. முதல் ஐந்து இடங்களுக்கு சரியான வீரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கில்லை கொண்டு வருவது அணியின் சமநிலையை உடைப்பதாக இருக்கும்.
இதற்கு அடுத்து கில்லை கொண்டு வருவதாக இருந்தால் அவரை விட முக்கியத்துவம் வாய்ந்தவராக ஜெய்ஸ்வால் இருப்பார். மூன்று வடிவ இந்திய அணியில் விளையாடும் திறமை இருந்தாலும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரை தேர்வு செய்வதும் முக்கியமானதாக இருக்கிறது.
இதுகுறித்து அஸ்வின் பேசும்பொழுது “இந்திய டி20 அணி தேர்வு குறித்து சில பேச்சுவார்த்தைகள் இருந்து வருகிறது. கடந்த டி20 உலக கோப்பையில் மாற்றுத் துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இருந்த காரணத்தினால், தற்போது கில் இந்திய டி20 அணிக்கு பொருத்தமாக இருப்பாரா என்று பார்க்க வேண்டும். இந்த இடத்தில் ஜெய்ஸ்வாலுக்கு ஒரு முன்னுரிமை கிடைக்கும். ரோகித் சர்மா இல்லாததால் அவர் அந்த இடத்திற்கு பார்க்கப்படுவார்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2026.. பும்ரா சூரியகுமார் வெளியிட்ட தகவல்.. கில் பிரச்சனை முடிந்தது – ரசிகர்கள் மகிழ்ச்சி
“சரி இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் யார் என்றால் அது கில்லாக இருக்க முடியுமா? ஏனென்றால் இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடி இருக்கிறார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளே வர முடியுமா? இப்படி நிறைய கேள்விகள் இருப்பதால் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் பல கேள்விகள் இருந்தாலும் இந்திய டி20 கிரிக்கெட் பலமானதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.