இந்திய கிரிக்கெட்

கோச் பொறுப்பில் நான் தூங்காத இரவு அதுதான்.. அதுக்கு காரணம் சஞ்சு சாம்சன் – கம்பீர் வெளிப்படை பேச்சு

​இந்திய கிரிக்கெட் அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர், இங்கிலாந்து தொடரின் போது சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்சியைச் சேர்த்ததுதான் தனது பயிற்சியாளர் பயணத்தில் எடுத்த மிகக் கடினமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​டி20 வேர்ல்ட் கப் தொடரில் பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் விருதை வென்ற சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து போட்டிகளில் விளையாட வைக்க முடியாத சூழல் அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.

​அதே நேரத்தில் இளம் பிளேயரான வைபவ் சூர்யவன்சி மிகச் சிறந்த ஃபார்மில் இருந்ததால், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் ஹெட்கோச் கௌதம் கம்பீருக்கு உருவானது.

​இதுகுறித்து கௌதம் கம்பீர் பேசும்போது, “என்னுடைய இரண்டு ஆண்டு கால பயிற்சியாளர் பயணத்தில், அன்னைக்கு ஒரு இரவு மட்டும்தான் என்னால் தூங்கவே முடியவில்லை. இதை நான் சஞ்சுவிடமும் சொன்னேன், ஏனெனில் டி20 ஃபார்மட்டில் எனது பயிற்சியாளர் காலத்தில் நான் எடுத்த மிகக் கடினமான முடிவு இதுதான். தொடரின் நாயகன் விருதை வென்ற ஒரு பிளேயரை 3 அல்லது 4 போட்டிகளுக்குப் பிறகு வெளியே உட்கார வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அந்த சமயத்தில் வைபவ் சூர்யவன்சியும் சிறந்த ஃபார்மில் இருந்தார், மேலும் இந்திய அணிக்காக தொடரைக் கைப்பற்ற டாப் ஆர்டரில் அதிரடியான ரன்கள் தேவைப்பட்டன. இதைப்பற்றி சஞ்சுவிடம் நேர்மையாகப் பேசியபோது அவரும் அதை மிகவும் நேர்மறையாகப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டார்,” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர், “சோஷியல் மீடியா அல்லது வெளியில் இருந்து வரும் சத்தங்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிப்பது இல்லை. டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் கோச் மற்றும் கேப்டன் இணைந்து அணிக்கு எது சிறந்தது என்று யோசித்துதான் முடிவெடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை பிரபலமான முடிவுகளை எடுப்பது மிகவும் எளிதானது, ஆனால் சரியான முடிவுகளை எடுப்பதுதான் கடினமானது. கடந்த ஒன்றரை இரண்டு ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு காம்பினேஷனை ஓரிரு தோல்விகளுக்காக திடீரென மாற்றிவிட முடியாது,” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts