ஜடேஜா பலவீனமே இது தான்.. பயிற்சியில செய்ற இத களத்துல செய்ய மாட்டார் – அஸ்வின் பேச்சு

0
11
Ashwin

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவின் பலவீனமாக தற்பொழுது எது மாறி இருக்கிறது என்பது குறித்து அவருடைய பந்துவீச்சு பார்ட்னராக இருந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நேற்று நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய ஸ்பின்னர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரது வந்து வீச்சு செயல் திறனும் மிகவும் சுமாராக இருந்தது தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இவர் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இது ஜடேஜாவுக்கு மிகவும் ஒரு சவாலான காலகட்டம். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவை மிகவும் நெருக்கமாக அக்சர் படேல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய பிரச்சனையாக சுழல் பந்துவீச்சில் பேட்டிங் செய்வது இருக்கிறது”

“இங்கு யாருடைய கிரிக்கெட் வாழ்க்கையையும் அவ்வளவு எளிதாக சீக்கிரத்தில் இன்னொருவர் முடிவு செய்யக்கூடாது. டி20 உலகக் கோப்பை தொடர் முடிவுக்கு பிறகு ஐபிஎல் தொடர் இருக்கிறது. அதில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதே இறுதி முடிவை நோக்கி செல்லும்”

- Advertisement -

அவருடைய பலவீனம் இதுதான்

“சில நேரங்களில் ஜடேஜாவின் பலமே அவருக்கு பலவீனமாக மாறிவிடுகிறது. அவர் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என எல்லாவற்றிலும் மிகவும் திறமைசாலி. இது குறித்து எனக்கு சில நேரங்களில் பொறாமையை வந்துவிடும். ஆனால் ஜடேஜாவின் பிரச்சனையே அவரது திறமைதான். அவர் அதை தாண்டி வெளியில் போக மாட்டார்/ புதிதாக எதையும் முயற்சி செய்து பார்த்து பயன்படுத்த மாட்டார்”

இதையும் படிங்க : நியூசி ஜெயிக்க காரணம் கில் தான்.. எங்க ஆள் ஷான் மசூத் மாதிரியே பண்றாரு – பாக் பசித் அலி பேச்சு

“ஜடேஜா ஒரு உண்மையான லெஜன்ட். அதனால்தான் அவர் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அவர் பந்துவீச்சில் ஏதாவது புதிய முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். குறிப்பாக பயிற்சியில் அவர் கேரம் பந்துகள் வீசி நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றை அவர் போட்டியின் போது வீசியது இல்லை. அவர் கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -