சுப்மன் கில் கேப்டன்சி கற்றுக்கொள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணியின் தோல்விக்கு அவருடைய கேப்டன்சி காரணம் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ந்து ஆறு ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு கொடுத்தார். அத்துடன் ரவீந்திர ஜடேஜாவை தாமதமாகக் கொண்டு வந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாக செட்டில் ஆகி அடுத்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்கள்.
கில்தான் முக்கிய காரணம்
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் செயல்பட்ட விதம் இந்தியன் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்திருப்பது எப்படி என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷீத் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “நியூசிலாந்து அணியின் இந்த வெற்றிக்கான முழு பெருமையும் இந்திய அணியின் கேப்டன் கில்லுக்கே சேர வேண்டும். பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இல்லாமல் விளையாடினார்கள். மேலும் ஷமியை சேர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை. இப்போதைக்கு இந்திய அணியின் பலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என சுருங்கி இருக்கிறது. மற்ற வீரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?”
கேப்டன்சி கற்க பள்ளிக்கூடத்துக்கு போகணும்
“நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் 300 ரன்கள் அடித்த பொழுது அவர்கள் தங்கள் இலக்கை மிகச் சரியாக தீர்மானித்துக் கொண்டார்கள். உங்களிடம் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களை தவிர்த்து மற்றதில் யார் முன்னணி பவுலர்கள்? என்றால் ஸ்பின்னர்கள்தான். அப்படி இருக்கும் பொழுது கில் எதற்காக நிதீஷ்குமார் ரெட்டியை முன்பாக கொண்டு வந்தார்?”
இதையும் படிங்க : இனி இந்த வீரர் தேவைப்பட மாட்டார்.. விராட்டை பார்க்க பரிதாபமாக இருக்கு.. இது தேறாது – ஸ்ரீகாந்த் கருத்து
“கேப்டன்ஷியில் கில் எங்களுடைய ஷான் மசூத்தை காப்பி அடித்தது போல இருந்தது. ட்ரெஸ்ஸிங் ரூமில் அவருக்கு என்ன செய்து சொல்லப்பட்டதோ அதன்படியே அவர் நடந்து கொண்டு இருந்தார். கில் கேப்டன்சி கற்றுக்கொள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






