நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. அவருடைய இடத்தில் ஜிதேஷ் சர்மா விளையாடினார். இந்த நிலையில் இனி இந்திய டி20 பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் வருவது கடினம் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
இந்திய டி20 அணிக்கு சுப்மன் கில் மீண்டும் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்ட பிறகு, சஞ்சு சாம்சன் தொடக்க இடம் பறிக்கப்பட்டது. சில வாய்ப்புகள் மிடில் ஆர்டரில் கொடுக்கப்பட்டது. அவருக்கு அது பழக்கம் இல்லாத இடம் என்கின்ற காரணத்தினால் அந்த வாய்ப்பும் நிறுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது அவர் இரண்டாவது விக்கெட் கீப்பராக மாற்றப்பட்டு இருக்கிறார்.
இனி எப்போதும் கடினம்
நேற்று எந்த மாதிரி இந்திய பிளேயிங் லெவன் அமைக்கப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். ஏனென்றால் அந்தப் பிளேயிங் லெவன்தான் டி20 உலக கோப்பையிலும் களம் இறக்கப்படும் என்று கூறப்பட்டது. இப்படியான நிலையில் தான் சஞ்சு சாம்சன் கழட்டி விடப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” சஞ்சு விளையாட வேண்டும் அவர் ஏன் விளையாட வைக்கப்படுவதில்லை? என போட்டிக்கு முன்பாக நிறைய பேச்சுகள் இருந்தது. அவர் அணியில் இருந்து மிகப் படும்போதெல்லாம் அவர் தேவையான ரன்கள் எடுத்தாரா? என்கின்ற விவாதங்கள் நடைபெறும். தற்போது துணை கேப்டனாக கில் வந்துவிட்ட பிறகு இனி எப்பொழுதும் பிளேயிங் லெவனில் நுழைய சஞ்சு சாம்சனுக்கு கடினமாக இருக்கும்”
இதுவும் ஒரு காரணம்
” சஞ்சு ஐந்தாவது இடத்தில் அதிகம் விளையாடியது கிடையாது. ஆர்சிபி அணிக்காக ஜிதேஷ் சர்மா கீழ் வரிசையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதன் காரணமாகத்தான் தற்போது அவர் விளையாடுகிறார், இவர் வெளியில் இருக்கிறார். ஒருவேளை சஞ்சுவை நீங்கள் மூன்றாவது இடத்தில் விளையாட வைத்தால் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக பயன்படுத்துங்கள்”
இதையும் படிங்க : பும்ரா பாய் என் கிளப்புக்கு வரட்டும் வெல்கம்.. என் பவுலிங் திட்டம் இதுதான்.. உற்சாகம் ஆகக்கூடாது – அர்ஷ்தீப் சிங் பேச்சு
“இந்திய அணி சீக்கிரத்தில் விக்கெட்டுகளை இழந்த பொழுதும் எந்தவித அச்சமும் இல்லாமல் விளையாடி 175 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து திரும்பி வந்தாலும் கூட அவர் அவருடைய இயல்பிலேயேதான் இருந்தார். இந்திய அணியை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்கா பவுலிங் யூனிட்டில் பவர் இல்லை” என்று கூறியிருக்கிறார்.






