பைனல்ல நியூசிலாந்து ஓட விடுவாங்க.. இந்தியாவுக்கு அவங்கள பார்த்தா பயம்.. சாம்பியன் ஆவாங்க – பிராட் ஹாடின் கணிப்பு

0
9
Haddin

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பிராட் ஹாடின் இந்திய அணியை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வென்று சாம்பியன் ஆகும் எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து சாதனை

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்திய அணியை இந்தியாவில் வைத்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வாஸ் செய்தது. இது ஒரு உலகக் கோப்பையை வெல்வதை விட மிகக் கடினமான சாதனை என பல கிரிக்கெட் வல்லுனர்களும் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்காக வந்த நியூசிலாந்து அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வென்று அசத்தியது. சமீபத்தில் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்திய அணிக்கு எதிராக வெளிப்படுத்தி உள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து வெல்லும்

இதுகுறித்து பிராட் ஹாடின் கூறும்பொழுது ” நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் ஒரு குறிப்பிட்ட தொடக்கத்தை பெற்று விட்டால் அவர் இந்தியாவின் சொந்த மண்ணில் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் ஒரு வீரராக இருப்பார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா சந்திக்கக் கூடாது என நினைத்த ஒரே அணி நியூசிலாந்துதான்”

இதையும் படிங்க: பும்ராவ பார்த்து எங்களுக்கு பயம் கிடையாது.. போன சீரிஸ்ல என்ன செஞ்சோம்னு தெரியும்தானே – கிளன் பிலிப்ஸ் சவால்

“நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடும் பொழுது பயப்படுவதில்லை. மேலும் அவர்கள் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறார்கள். மேலும் பின் ஆலன் இதே சுதந்திரத்துடன் விளையாடினால் பெரிய அழுத்தத்தை இந்திய அணி மேல் போட முடியும். அதனால் நான் நியூசிலாந்து வெல்லும் என்று நினைக்கிறேன்” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -