இன்று டி20 உலக கோப்பை இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு இந்திய அணி இடம் பதட்டம் இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பிரிவில் வலிமையான தென் ஆப்பிரிக்கா இடம்பெற்று உள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்று இருக்கின்றன.
நம்ப முடியாதது
எனவே இந்த பிரிவில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வென்றால் நிச்சயம் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம் என்கின்ற நம்பிக்கை அதிகரிக்கும். இதே நிலைதான் தென் ஆப்பிரிக்க அணிக்கும் காணப்படுகிறது. எனவே இந்த போட்டி மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சிறந்த ஃபாமில் அபிஷேக் சர்மா வந்தார். ஆனால் அவர் இன்னும் ரன் கணக்கை மூன்று போட்டிகளாக தொடங்கவே இல்லை என்பது நம்ப முடியாத விஷயமாக ஆச்சரியமானதாக உள்ளது. ஆனாலும் இந்த பிரச்சனையை சூரியகுமார் யாதவ் சிறப்பாக சமாளித்து இருக்கிறார். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அபிஷேக் ஷர்மா திரும்பி வர முடியும்”
பதட்டம் இருக்கும்
“பேட்டிங் செய்ய சாதகம் இல்லாத ஆடுகளங்களில், பனிப்பொழிவின் சாதகம் இல்லாத நிலையில் ஒரு பெரிய இலக்கை துரத்தம் சூழ்நிலையில் இந்திய அணி பெரிய சவாலை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இதுவரை இந்திய அணிக்கு இப்படியான சவால்கள் இந்த தொடரில் அமையவில்லை”
இதையும் படிங்க : இங்கிலாந்து இல்லை..இந்த உ.கோ-ல் இந்தியாவை.. இவர்களால்தான் தோற்கடிக்க முடியும் – மொயின் அலி கணிப்பு
“இந்த போட்டியில் இந்தியா பேவரைட் அணியாக பார்க்கப்படுகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்க பேட்டிங் யூனிட்டில் இருக்கும் சக்தி வாய்ந்த பேட்டர்கள் காரணமாக இந்திய அணிக்கு பதட்டம் நிச்சயம் இருக்கும். இந்த டி20 வடிவத்தில் தென் ஆப்பிரிக்கா குறிப்பிட்ட நாளில் சிறப்பாக விளையாடினால் போட்டியில் சூட்டை அதிகமாக்கி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்.






