முதல்ல சூரியகுமார் ரன் எடுக்கட்டும்.. அது நடக்கணும்னா இத செஞ்சே ஆகணும் – பார்த்திவ் படேல் பேச்சு

0
23
Surya

தற்போது இந்திய டி20 அணியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய முன்னால் வீரர் பார்த்திவ் படேல் கூறியிருக்கிறார்.

இந்திய டி20 அணிக்கு சூரிய குமார் யாதவ் கேப்டன் ஆன பிறகு அவருடைய பேட்டிங் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் மற்றும் சையத் முஸ்டாக் அலி தொடரில் அவருக்கு ரன்கள் வந்திருந்தாலும் கூட, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருக்கு ரன்கள் வருவது சிரமமாக இருக்கிறது. தற்போது அவருடைய பேட்டிங் ஃபார்ம்தான் பிரச்சனையாகவும் இருக்கிறது.

- Advertisement -

ரன்கள் தேவையாக இருக்கிறது

இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் வந்து சூரியகுமார் யாதவ் பழையபடி ரன்கள் எடுப்பார் என்றால், கடைசி கட்டத்தில் அடித்து விளையாடுவதற்கு இந்திய அணியின் கைகளில் நிறைய விக்கெட் இருக்கும். எனவே இந்திய அணி எதிர்பார்ப்பதை விட 10 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுக்க முடியும். எனவே அவர் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதுகுறித்து பார்த்திவ் படேல் பேசும் பொழுது ” சூரியகுமார் யாதவ் என்கின்ற பேட்ஸ்மேனை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவருக்கு ரன்கள் தேவை என்பது உண்மைதான். அவருக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் ஒரு தொடக்கம் கிடைத்தது. பிறகு சையத் முஸ்டாக் அலி தொடரில் கொஞ்சம் ரன்கள் வந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது அவர் ரன்கள் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது”

- Advertisement -

இதைச் செய்ய வேண்டும்

“சூரியகுமார் யாதவ் லெக் சைடில் விளையாடுவதை பார்க்கும் பொழுது அவருக்கு ப்ளீக் ஷாட் மிகவும் பிடித்த ஒன்று. இதற்கு அவர் பந்தின் லென்த்தை மிகவும் விரைவாக கண்டுபிடிப்பார். அவருடைய ஃபுட் வொர்க் மிகவும் வேகமாக இருக்கும். அவருடைய ஸ்கோரிங் பகுதிகளை பார்த்தால் 50 சதவீதம் பைன்-லெக் பகுதியில் இருந்து லெக் சைடில் வரும்”

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்திக்கு அதிகம் ஆட வைக்காதீங்க.. அப்புறம் பெருசா சிக்குவீங்க – அஸ்வின் தந்த எச்சரிக்கை

“அந்தப் பகுதியில் நீங்கள் அடிக்கும் பெரும்பாலான ஷாட்டுகளுக்கு பந்து ஸ்டெம்ப் லைனில் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் விக்கெட்டை ஆபத்தில் வைத்து அப்படியான ஷாட் விளையாடுகிறீர்கள் என்று அர்த்தம். எனவே சூரியகுமார் யாதவ் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் பிறகு அவருக்கு ரன்கள் கிடைக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -