முதல் டெஸ்ட் 5 சதங்கள் எங்க போச்சு?.. அந்த ஒரு விஷயத்தை குறைவா எடை போடாதீங்க – அஸ்வின் அறிவுரை

0
45
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தினால் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கான சிக்கல்

இந்திய அணியின் கீழ் வரிசை பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. இதன் காரணமாக முதல் ஐந்து விக்கெட்டுகள் எழுந்ததும் இந்திய அணி மிக வேகமாக சரிந்து விடுகிறது. அதே சமயத்தில் இங்கிலாந்தின் கீழ் வரிசை பேட்டிங் மிகவும் வலிமையாக இருக்கிறது. இது போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஐந்து சதங்கள் அடித்து இருந்த பொழுதும் கூட போட்டியை குறைந்தபட்சம் டிரா செய்யும் வாய்ப்பை கூட பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் கேப்டன் கில்லுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐந்து சதங்கள் எங்கே போனது?

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “எங்களுடைய பேட்டர்கள் பொறுப்பேற்க வேண்டும். முதல் டெஸ்டில் ஐந்து சதங்கள் அடித்தும் அவை எங்கே போயின? ஏன் அவை பெரிய சதங்களாக மாறவில்லை? நாம் இதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் நம் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க : பணிச்சுமை இல்லை.. பும்ரா 2வது டெஸ்ட்டில் விளையாடாமல் இருக்க இதுதான் முக்கிய காரணம் – மார்க் பவுச்சர் பேட்டி

“டெஸ்ட் போட்டியில் மெய்டன் ஓவர்கள் வீசுவதின் முக்கியத்துவம் குறித்து யாருக்கும் சரியாக புரிவதில்லை. பும்ரா ரன்கள் விட்டு தந்தால் பிரச்சனை இல்லை அவர் விக்கெட் எடுப்பார். ஆனால் சிராஜ் ரன்கள் அதிகம் விட்டு தரக் கூடாது. ஆனால் அவரிடம் விட்டு தருவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற பவுலர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -