இந்திய கிரிக்கெட்

நான் ஆட முடியாம போனதுக்கு சிஎஸ்கேதான் காரணம்.. போன வருஷம் அங்க ரொம்ப ஏமாந்து போனேன் – அஸ்வின் பேச்சு

இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு 10 கோடி ரூபாய்க்கு ரவிச்சந்திரன் அஸ்வினை சிஎஸ்கே வாங்கியது. அவர் ஒன்பது போட்டிகளில் ஒன்பது ரன் எக்கானமி உடன் ஏழு விக்கெட் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ஓய்வுக்கு காரணம் சிஎஸ்கே

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “நான் ஆர்சிபி போட்டியை ஒரு நடுநிலையான கண்ணோட்டத்துடன் பார்க்க விரும்புகிறேன். ஆனால் சமீபத்தில் சிஎஸ்கே அணி உடன் எனக்கு ஒரு ஏமாற்றமான சீசன் இருந்தது. அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால் நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்று நினைத்தேன். ஆனால் உணர்ச்சி ரீதியாக என்னிடம் அதற்கான ஆற்றல் இல்லாமல் போய்விட்டது”

“நான் மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது எனக்கு கலக்கம் அளிப்பதாக இருந்தது. மிகவும் வேதனையாகவும் இருந்தது. என்னை தொடர்ந்து அணியில் வைத்திருப்பதா இல்லை வேண்டாமா என்கிற அழுத்தத்தை சிஎஸ்கே நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்று நான் நினைத்தேன். அதனால் நானே ஓய்வு முடிவை அறிவித்தேன். ஆனால் நான் இன்னும் ஏமாற்றத்தில் இருக்கிறேன். எனக்கு எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் இருந்தன”

- Advertisement -

இப்படி உருவாக்க வேண்டும்

“இந்த இளம் வீரர்களுக்கு முறையான ஆதரவு தேவை. அவர்களுக்கு நல்ல பயிற்சி, தீவிரம் மற்றும் சரியான சூழலை வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் எப்படி வளர்ச்சி அடைவார்கள்?”

இதையும் படிங்க : சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இந்த வீரர் இருக்கவே கூடாது.. இவரை வச்சுக்கிட்டு நீங்க ஜெயிக்கவே மாட்டீங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“இந்த ஆட்டத்தில் எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆர்சிபி வலுவான அணி என்பது எனக்கு தெரியும். ஆனால் கடந்த போட்டிக்கு பிறகு சிஎஸ்கே அணி முன்னேற்றம் அடையும் என்று நான் நினைத்தேன். ஆனால் ஆர்சிபி விளையாடிய விதம் அவர்கள் எச்சரிக்கை செய்ததைப் போல இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts