நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் படுதோல்விக்கு தானும் மிகவும் வருத்தப்படுவதாகவும், அதே சமயத்தில் தன்னுடைய குறிக்கோள் வேறு என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் உருக்கமான முறையில் பேசி இருக்கிறார்.
18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் ஏல அணுகுமுறை தான் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. மூன்றாவது ஸ்பின்னர் ஆக ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியதும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கி இருக்கிறது.
அஸ்வின் வெளியேற வேண்டும்
இதன் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களும் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணி வெளியேற்றும் வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமானவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஏனென்றால் அவரை 9.75 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியிருக்கிறது. அவரை வெளியே விடும் பொழுதுதான் பெரிய பணம் கிடைக்கும்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் “அன்புள்ள அஸ்வின் நீங்கள் என்னுடைய சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறி விடுங்கள்” என்று நேரடியாகவே வீடியோவில் கமெண்ட் செய்திருந்தார். இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் எந்தவித கோபத்தையும் வெளிப்படுத்தாமல் மிகவும் உருக்கமான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.
நானும் மூலையில் உட்கார்ந்து அழுகிறேன்
இது குறித்து பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ” சிஎஸ்கே அணியின் நலனில் எனக்கும் அக்கறை இருக்கிறது. உங்கள் எல்லோரையும் விட நான் அதிகமாக அணியை நேசிக்கிறேன். நான் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் இந்த அணிக்கு விளையாடி பட்டங்களை வென்று இருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு சாம்பியன் அணியை இப்படி பார்க்கும் பொழுது எனக்கும் வருத்தமாக இருக்கிறது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். இதற்காக நானும் மூலையில் உட்கார்ந்து அழுகிறேன். அடுத்து என்ன செய்வது? இதுதான் எனது குறிக்கோளாக இருக்கிறது”
இதையும் படிங்க : கில் சாதாரண ஆள் இல்ல.. கேப்டனுக்கு சரியானவர்.. ஆனா அவருக்கு பிசிசிஐ இதை செய்யணும் – ஸ்டீவ் வாக் பேட்டி
“நான் இந்த தொடரை வீணாக்குவேன் என்று நினைக்காதே. என் கட்டுப்பாட்டில் உள்ளதை நான் செய்வேன். என் கையில் பந்தை கொடுத்து வீசச் சொன்னால் வீசுவேன். பேட்டை கொடுத்து பேட்டிங் பண்ண சொன்னால் பண்ணுவேன். நான் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். மேலும் நான் வேலை செய்ய வேண்டிய பகுதிகளும் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நான் பவர் பிளேவில் நிறைய ரன்கள் விட்டு தந்து இருக்கிறேன். அடுத்த முறை நான் பவர் பிளேவில் விட்டு தராத அளவுக்கு தயாராகி வர உழைப்பேன்” என்று கூறியிருக்கிறார்.






