தோனி இந்த வீரரை நிச்சயம் வாங்க மாட்டார்.. இவர்தான் சிஎஸ்கேவுக்கு வருவார்.. அதுக்கு இதை செய்யணும் – அஸ்வின் கருத்து

0
131
Ashwin

அடுத்து நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த வீரரை வாங்க முயற்சி செய்ய வேண்டும், செய்யக்கூடாது? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

நேற்று 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்திருக்கின்றன. இந்த அடிப்படையில் நிறைய சிறந்த வீரர்கள் வெளியில் விடப்படவில்லை. எனவே சில சிறந்த வீரர்கள் மட்டுமே ஏலத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர் சிஎஸ்கேவுக்கு வேண்டாம்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” தற்போது சிஎஸ்கே அணியில் இரண்டு இடங்கள் இருக்கின்றன ஒன்று பினிஷர், இன்னொன்று ஸ்பின் ஆல்ரவுண்டர். இதை வைத்து பார்க்கும் பொழுது சிஎஸ்கே அணிக்கு கேமரூன் கிரீன் செட்டாக மாட்டார். ஆனால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று நிறைய பேச்சுகள் இருக்கிறது. ஆனாலும் அவர் சிஎஸ்கே அணிக்கு கிடைக்க மாட்டார்”

“மேலும் அவரை அணிக்குள் கொண்டு வந்தால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது நிரந்தரம் இல்லாமல் இருக்கிறது. இந்த இடத்தில் ஆட்டத்தை முடிக்கும் ஆண்ட்ரே ரசல் தேவைப்படுகிறார். சிஎஸ்கே அணிக்கு அனலைஸ்ட் ஆக இருக்கக்கூடியவர் ரசலை கொண்டு வர விரும்புகிறார். எனவே இவர்தான் சிஎஸ்கே அணிக்கு வரப்போகிறார்”

- Advertisement -

சிஎஸ்கே இதை ஏலத்தில் செய்யணும்

” சிஎஸ்கே அணி ஏலத்தில் கேமரூன் கிரீனில் விலையை அதிகமாக்கும் வேலையை செய்ய வேண்டும். எப்படியும் இவரை கொல்கத்தா ஏலத்தில் அதிக விலைக்கு சென்று வாங்கும். ஒருவேளை இதை சிஎஸ்கே செய்யவில்லை என்றால் அவர்கள் கிரீனை வாங்கிவிட்டு, பிறகு ரசலை வாங்குவதற்கும் வருவார்கள். எனவே கிரீன் விலையை ஏற்றி விட வேண்டும்”

இதையும் படிங்க : எங்க கொல்கத்தா ஆடுகள தயாரிப்பாளர் மேல தப்பில்லை.. கம்பீர் மேலதான் தப்பு.. இதுதான் நடந்தது – கங்குலி விளக்கம்

“தற்போது பினிஷர் ஜடேஜா சென்று விட்டதால் தோனி செல்லாமல் அணியில் நிற்கிறார். எப்படியும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த முறை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இருப்பதால், தோனியை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -