தற்போது இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத் தயாரிப்பாளர் மேல் எந்த குறையும் சொல்ல முடியாது என சௌரவ் கங்குலி கூறி இருக்கிறார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஹர்பஜன் சிங் இந்த ஆடுகளம் மிகவும் கேலிக்கூத்தானது என வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
தற்போது கொல்கத்தா ஆடுகளம் பேகட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 16 விக்கெட்டுகள் விழுந்து இருந்தது. மேலும் சுழல் பந்து மற்றும் வேகம் என இரண்டுக்குமே பந்துவீச்சாளர்களுக்கு அதிகப்படியான சாதகம் காணப்படுகிறது. இது குறித்து ஹர்பஜன் சிங், ஆரோன் பின்ச், மைக்கேல் வாகன் என பலவீரர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
ஒரு பக்கத்தில் இந்திய அணி நிர்வாகம் இப்படியான ஒரு ஆடுகளத்தில் விளையாட விரும்பவில்லை எனவும், இது முழுக்க கொல்கத்தா ஆடுகளத் தயாரிப்பாளர் சுஜன் முகர்ஜியின் தவறு எனவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கங்குலி மிக முக்கியமான ஒரு விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எங்கள் தவறு கிடையாது
இதுகுறித்து கங்குலி கூறும் பொழுது “ஆடுகளத்திற்கு நான்கு நாட்களுக்கு மேல் தண்ணீர் ஊற்ற வேண்டாம் என இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதன் காரணமாக ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கிறது. எனவே இதில் ஆடுகளத் தயாரிப்பாளர் சுஜன் முகர்ஜி மீது எந்த தவறும் கிடையாது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இன்று சுப்மன் கில் பேட்டிங் செய்ய வருவாரா?.. பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. இந்திய அணிக்கு சிக்கல்
அதே சமயத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசும் பொழுது ” முதல் நாளில் முதல் இரண்டு மணி நேரத்தை பார்த்த பொழுது இந்த ஆடுகளம் இவ்வளவு மோசமாக அடுத்த நாளில் மாறும் என்று நாங்கள் யாருமே நினைக்கவில்லை. இப்படி நடந்தது நாங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒன்று” என்று கூறியிருக்கிறார்.






