அப்பவே பிரியன்ஸ் ஆர்யாவை வாங்க சொல்லி சொன்னேன்.. ஆனா இத சொல்லி மறுத்துட்டாங்க – அஸ்வின் பேச்சு

0
7
Ashwin

இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில வருடங்களுக்கு முன்பாகவே பிரியன்ஸ் ஆர்யாவை தான் வாங்க சொல்லி சிலரிடம் கூறியதாக பேசி இருக்கிறார்.

நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் பிரியன்ஸ் ஆர்யா வெறும் 37 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் மொத்தம் ஒன்பது சிக்ஸ்ர்கள் அடக்கம். இவரது அதிரடியால் பஞ்சாப் மிகவும் எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் திறமை

பிரியன்ஸ் ஆர்யாவை வாங்குவதற்கு முன்பாக, அவர் விளையாடிய ஒரே ஒரு பந்தை மட்டுமே பார்த்துவிட்டு பெரிய சூப்பர் ஸ்டார் வீரராக இந்த பையன் வருவான் என்று கூறி ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அளவிற்கு இவரது திறமை அவரை ஈர்த்து உள்ளது.

இந்த நிலையில் மெகா ஏலத்தில் சரியாக செயல்படாமல் போய்விட்டால் மினி ஏலத்தில் அணியை சரி செய்ய முடியும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். இதற்கு வீரர்களை சரியாக பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

நான் முன்பே சொன்னேன்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது ” ஒரு மினி ஏலத்திற்கு முன்பாக அன்சூல் காம்போஜ் மற்றும் பிரியன்ஸ் ஆர்யா பற்றி நான் பேசி இருந்தேன். காம்போஜை மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. ஆனால் பிரியன்ஸ் ஆர்யாவை யாரும் வாங்கவில்லை. அப்போது எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. நான் சில வீரர்களிடம் இந்த பையனை பரிந்துரைத்தேன். ஆனால் தங்கள் அணியில் தொடக்க இடத்திற்கு வீரர்கள் இருப்பதால் இந்த பையனை சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்”

இதையும் படிங்க : இந்திய டி20 கேப்டன் பதவியை ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பார்க்கக் கூடாது.. அதுக்கு பதிலா இதைத்தான் செய்யணும் – ஜாகிர் கான் பேச்சு

“ரிக்கி பாண்டிங் பிரியன்ஸ் ஆர்யா விளையாடிய ஒரு பந்தை வைத்தே அவரது திறமையை கண்டுபிடித்து விட்டார். மினி ஏலத்தில்தான் கூப்பர் காணலியை கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். நாம் மெகா ஏலத்தில் சரியாக செயல்பட முடியாமல் போனால், மினி ஏலத்தில் அந்த குறைகளை சரி செய்ய முடியாமல் கிடையாது. இதற்கு நாம் உலகெங்கும் நடக்கும் தொடர்களை வீட்டில் அமர்ந்தபடியே டிவியிலும் மொபைலிலும் பார்க்கலாம். அப்படி பார்த்து கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -