நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு எப்படி செல்ல வேண்டும்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் மூன்று போட்டிகளை வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து வேடிக்கை வெற்றி பெற்று இருக்கிறது.
முதல் வீரர் மோசமான சாதனை
தற்போது நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கும் நான்கு போட்டிகளில் இந்திய துவக்க அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இரண்டு போட்டிகளில் அதிரடியான அரை சதங்களையும், மற்ற இரண்டு போட்டிகளில் முதல் பந்திலையை கோல்டன் டக்கும் ஆகியிருக்கிறார்.
மேலும் தற்போது இந்திய அணியில் அக்சர் படேல் இல்லாத நிலையில் அனைவரும் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள். எனவே விரல் சுழல் பந்துவீச்சாளர் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
அபிஷேக் இதைச் செய்ய வேண்டும்
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நேற்று விரல் சுழல் பந்துவீச்சாளர் யாரும் இல்லை. ஆனால் நிச்சயமாக நமக்கு அது தேவைப்படும். நீங்கள் இலங்கையில் விளையாடும் பொழுது விரல் சுழல் பந்துவீச்சாளர் கட்டாயமாக இருப்பார். நீங்கள் மென்மையாக விளையாடி தோற்பதை விட, கொஞ்சம் தைரியத்தோடு விளையாடி தோற்பது மேலானது. எனவே நாம் எல்லா ஆப்ஷன்களையும் வைத்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 10-15 நிமிஷம் அது மோசமா போனா இந்திய அணி தோற்றுவிடும்.. வித்தியாசமான பிரஷர் இருக்கு – ரவி சாஸ்திரி பேச்சு
“அபிஷேக் ஷர்மா அவர் விளையாடும் விதத்தில்தான் விளையாட முடியும். ஆனால் அவர் தன்னுடைய இன்னிங்சை கொஞ்சம் பழைய பேட்டிங் முறையில் கட்டமைக்க வேண்டும். நீங்கள் இதற்காக பழைய கிரிக்கெட் பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் ஆறு ஓவர்களில் 50 அல்லது 55 ரன்கள் எடுத்திருந்தால், பின்பு வேகமாக எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






