தற்போதைய இந்திய அணி டி20 உலக கோப்பையை தக்க வைக்கக்கூடிய அளவுக்கு வலிமையாக தெரிவதாகவும் ஆனால் ஒரு வித்தியாசமான அழுத்தம் இருப்பதாகவும் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இதுவரை டி20 உலக கோப்பை எந்த நாட்டில் நடைபெற்றதோ அந்த நாடு கோப்பையை கைப்பற்றியது இல்லை என்கின்ற வரலாறு இருந்து வருகிறது. இந்த முறை இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. எனவே இந்த நிலைமைக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல திறமை இருக்கிறது
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது “தற்போது வீரர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு டி20 உலக கோப்பையில் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது. மேலும் புந்தைய உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் கொண்ட பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே சிறப்பான நிலையில் இருக்கிறார்கள்”
“மேலும் திலக் வர்மா நல்ல உடல் தகுதியுடன் அணிக்கு திரும்பி விடுவார் என்று நினைக்கிறேன். அவர் பெரிய போட்டிகளில் நன்றாக விளையாடக்கூடிய வீரராக திறமை பெற்றவராக இருக்கிறார். மேலும் அவர் மேல் வரிசையில் ஒரு இடது கை வீரராகவும் இருக்கிறார்”
இந்த அழுத்தம் உள்ளது
“இந்த டி20 உலக கோப்பை தொடரில் சுழல் பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறேன். இந்திய அணியை பொருத்தவரையில் இதற்கான ஆயுதங்கள் மிகச் சிறப்பாக இருக்கிறது. நல்ல வெரைட்டியுடன் இந்திய சுழல் பந்துவீச்சு இருக்கிறது”
இதையும் படிங்க : நான் அப்பவே சொன்னேன் சஞ்சு சாம்சனுக்கு இது கிடையாது.. கம்பீர் இந்த முடிவை எடுப்பார் – இர்பான் பதான் பேச்சு
“அதே சமயத்தில் சொந்த மண்ணில் விளையாடுவது வீரர்களுக்கு ஒரு வித்தியாசமான அழுத்தத்தை உருவாக்கும். அது எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. டி20 கிரிக்கெட் பொருத்தவரை 10 முதல் 15 நிமிடங்கள் ஏற்படும் தவறுகளை ஒரு போட்டியை தோற்பதற்கு போதுமானது. இந்த அழுத்தத்தை இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதில் தான் வெற்றி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






