நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்த முறை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா 8 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் அவருக்கு தொடர்ந்து ஒரே மாதிரியான பலவீனம் இருந்து வருகிறது. ஆனால் அதை சரி செய்து கொள்வதற்கு அவர் செய்யவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
பெங்களூர் ஆடுகளத்தில் எப்பொழுதும் ஆரம்பத்தில் கொஞ்சம் ஈரம் இருக்கும். அப்படியான நேரத்தில் பந்து ஆடுகளத்தில் பட்டு தானாக நகரும். இதைப் புரிந்து கொண்டு ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக விளையாடியிருந்தால் இறுதியில் பெரிய ரன்கள் எடுத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “ஹைதராபாத் இரண்டு பவர் பிளேவையையும் இழந்தது. ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் ஆடுகளத்தை சரியாக கணிக்காததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆடுகளம் கொஞ்சம் ஈரமாக இருக்கும். இந்த நேரத்தில் பந்து கொஞ்சம் அலையும். இங்கு பொறுமையாக இருந்து பவர் பிளேவில் 45 ரன்கள் எடுத்திருந்தாலும் பிறகு பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்க முடியும்”
“என்னை பொறுத்தவரையில் நேற்று ஹைதராபாத் அணி எவ்வளவு ரன்கள் எடுத்திருந்தாலும் போதாது என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களுடைய பவுலிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருக்கிறது”
இதையும் படிங்க : நாங்க மத்த டீம்களுக்கு இந்த ஸ்டேட்மெண்ட்டை சொல்றோம்.. ஆனா விராட் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை – ரஜத் படிதார் சவால்
“அபிஷேக் சர்மாவை அவுட் செய்ய எங்கு பந்து வீசவேண்டும் என நான் ஒரு திட்டத்தை தயார் செய்திருந்தேன். அது குறித்து நேற்று நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆட்டம் இழந்து விட்டார். நான் அவரின் தீவிர ரசிகன். ஆனால் அவர் தனது பலவீனத்தை சரி செய்ய வேலை செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.