இந்திய கிரிக்கெட்

அபிஷேக் பெருசா பண்ண போறார்.. அவர் அடுத்த யுவராஜ் மட்டுமல்ல தோனியும்தான் – அஸ்வின் பேச்சு

இந்திய டி20 அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மிகப்பெரிய திறமையை கொண்டிருப்பதாகவும் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா வெறும் 39 பந்துகளை மட்டுமே சந்தித்து எட்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 74 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கி ஆட்டநாயகன் விருது வென்றார். இவரது பேட்டிங் சிறப்புகள் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்

அபிஷேக் ஷர்மா குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அவர்களின் கூறும் பொழுது ” அபிஷேக் ஷர்மா தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கவர் டிரைவாக உள்ளிருந்து வெளியில் அடித்தார். அவர் அடித்த ஐந்து சிக்ஸர்கள் பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆனால் நான் இந்த ஷாட் பற்றி பேச விரும்புகிறேன். ஏனென்றால் அதில் அவ்வளவு நேர்த்தி இருந்தது”

“அவருக்கு ஒரே ஒரு பேட் ஸ்விங் மட்டுமே இருந்த போதிலும், அவர் தனது பேட் ஸ்விங்கை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். ஒரு பேட்டர் தன்னுடைய டவுன் பேட் ஸ்விங்கை பயன்படுத்தி பேட்டிங்கை மிகவும் எளியதாக்க முடியும் என்றால், நீங்கள் ஏன் அந்த பேட்ஸ்மேன் விளையாடுவதை நாள் முழுவதும் பார்க்க முடியாது?”

- Advertisement -

இதுதான் ஆரம்பம்

“இது அபிஷேக் ஷர்மாவின் வருகை கிடையாது; இதுதான் ஆரம்பம். அவர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறார். அவருக்கு நீண்ட எதிர்காலம் இருக்கிறது. அவர் கிரிக்கெட் உலகத்தையே பிரமிக்க வைக்கப் போகிறார். இதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்”

இதையும் படிங்க : மனதை திறந்து சொல்றேன்.. இந்தியா வேற லெவல்ல இருக்கு.. நாங்க பக்கம் கூட இல்ல – வாசிம் அக்ரம் கருத்து

“யுவராஜ் சிங் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தன்னை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிக் கொண்டதைப் போல, இவரும் தன்னை வெகு சீக்கிரத்தில் மாற்றிக் கொள்ளப் போகிறார். இவர் யுவராஜ் சிங்கின் பாரம்பரியத்தை தொடர்ந்து எடுத்துச் செல்லப் போகிறார் என்று நினைக்கிறேன். இவரிடம் அற்புதமான திறமை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts