நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய பெண்கள் அணி வென்றது 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றதை விட மிகப் பெரிய விஷயம் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி ஒரு உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
இது மிகப்பெரியது
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ஹர்மன் இந்த அணியை பல வகைகளில் எடுத்து வந்திருக்கிறார். ஆனாலும் இந்த தொடரில் சில தோல்விகள் வந்த போது அவர் விமர்சிக்கப்பட்டார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்திய பெண்கள் அணி எங்கேயோ பின்தங்கி இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறது”
“ஜிம்கானா கிளப்பில் அம்பதி ராயுடு பேட்டிங் செய்வதை பார்க்க பெரிய கூட்டம் இருந்தது. ஆனால் அங்கேயே பேட்டிங் பயிற்சி செய்து கொண்டு இருந்த இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜை கண்டு கொள்ள யாரும் இல்லை. 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை விட இது பெரியது. இது தொழில்முறையாக பெண்கள் கிரிக்கெட் விளையாடலாம் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறது”
திரைப்படமாக எடுக்கலாம்
“இது மிகப்பெரிய வெற்றி. இதை ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரால் திரைப்படமாக எடுக்க முடியும். ஆனால் அவர்கள் கதை சொல்லும் விதத்தில் மாற்றம் இருக்க வேண்டும். இது ஒரு சில வீரர்களால் வந்த வெற்றியாக காட்டப்படக்கூடாது. எனவே இது வெப் சீரிஸாக 8 எபிசோடுகளாக எல்லோரையும் வைத்து எடுக்கப்பட வேண்டும்”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கேவுக்கு கொடுக்கப்படுகிறாரா?.. குஜராத் ஆசிஸ் நெக்ரா பதில் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்
” உதாரணமாக பயிற்சியாளர் அமோல் மசூம்தார் மற்றும் ஸ்பின்னர் ஸ்ரீசரணி எல்லோரும் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீசரணி தன்னுடைய நிலைப்பாட்டில் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பது முக்கியம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் உலகக் கோப்பை திட்டத்திலேயே கிடையாது. எட்டு எபிசோடுகளாக உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்படும் வெப் சீரியஸின் இந்த மாதிரி கிளை கதைகளும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






