வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கேவுக்கு கொடுக்கப்படுகிறாரா?.. குஜராத் ஆசிஸ் நெக்ரா பதில் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0
98
Nehra

தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு ட்ரேட் செய்யப்படுகிறார் என்று பரவும் செய்தி குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா பதில் அளித்து இருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலிமையான ஒரு இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டரை விரும்புவதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து அஸ்வின் யூடியூப் சேனலில் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே வருகிறார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

பரபரப்பான செய்திகள்

மேலும் கே.எல். ராகுல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்கிறார் என செய்திகள் உறுதியாக வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களிடமிருந்து எந்த ஒரு வீரரையும் வெளியே விட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக கூறி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இத்தோடு டெல்லி அணிக்கு வர விருப்பம் தெரிவித்திருந்த சஞ்சு சாம்சன் கோரிக்கை அப்படியே நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது. டெல்லி அணியில் இருந்து சிறந்த வீரர் கிடைத்தால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் இதற்கு சம்மதிக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் வருகிறாரா?

வாஷிங்டன் சுந்தரின் சிஎஸ்கே வருகை குறித்து கிரிக்பஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா தங்கள் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கே அணிக்கு அனுப்ப எந்த எண்ணமும் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியா டி20 சீரிஸ்.. வெளியேறும் முக்கிய ஆஸி நட்சத்திர வீரர்.. இந்த தொடர் தேவையா?.. ரசிகர்கள் கடுமையான விமர்சனம்

இதன்மூலம் இந்த பரபரப்பான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் செயல்படுகின்ற காரணத்தினால் குஜராத் அணி இந்த முடிவை எடுக்காது என்று நினைத்தபடியே நடந்திருக்கிறது. மேலும் மகேந்திர சிங் தோனியின் விருப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -